பள்ளி கோடை விடுமுறையால் துணிக்கடையில் பணிபுரிந்தக்கொண்டிருந்த பெண்ணை அந்த கடையில் வேலை செய்யும் ஊழியர்  குடோனுக்கு அழைத்துச்சென்று பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதால் அந்த ஊழியரை பொதுமக்கள் குத்து குத்துன்னு குத்தி போலீசில் போலீசில் பிடித்துக் கொடுத்துள்ளனர். 

சென்னை வண்ணாரப்பேட்டை எம்.சி. ரோட்டில் உள்ள ஒரு ஜவுளிக்கடையில், 10-ம் வகுப்பு மாணவி ஒருவர், பள்ளி விடுமுறையையொட்டி கடந்த சில நாட்களுக்கு முன்பு வேலைக்கு சேர்ந்தார். அதே துணிக்கடையில் கொருக்குப்பேட்டையை சேர்ந்த செல்வதுரை என்பவர்  கடந்த 12 வருடங்களாக வேலைப்பார்த்து வந்தார். 

நேற்றுமுன்தினம் மாலை வேலை முடிந்து மாணவி தனது வீட்டுக்கு புறப்பட்டார். அப்போது அந்த ஜவுளிக் கடையில் வேலை செய்யும் செல்லதுரை என்ற ஊழியர், அந்த மாணவியை ஜவுளிக்கடையில் உள்ள அறைக்கு அழைத்துச்சென்று பாலியல் தொல்லையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. 

இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி அலறிக் கூச்சலிட்டார், மாணவியின் அலறல் சத்தம் கேட்டதும், அக்கம் பக்கத்தில் இருந்த பொதுமக்கள், சிறுமியை மீட்டனர். பின்னர் கடை ஊழியர் செல்லதுரையை பிடித்து சராமாரியாக தாக்கி ரத்த காயங்களுடன், வண்ணாரப்பேட்டை போலீசில் பிடித்துக் கொடுத்தனர் ஒப்படைத்தனர்.  இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்லதுரையை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.