அரசு பள்ளி கழிவறையில் சிகரெட் பிடித்த 10-ம் வகுப்பு மாணவிகள்.. நேரில் பார்த்த மாணவிக்கு என்ன நடந்தது தெரியுமா?
சமீபகாலமாக அரசு பள்ளி மாணவர்களின் அட்ராசிட்டி குறித்த வீடியோக்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. குறிப்பாக மாணவிகள் பீர் அருந்துவது, பள்ளி வளாகத்தில் புகைப்பிடிப்பது, பேருந்துகளில் மது அருந்துவது, பொது இடங்களில் குத்தாட்டம் போடுவது போன்ற ஒழுங்கீன செயல்களில் ஈடுபட்டு வருவது போன்ற வீடியோக்கள் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளன.
அரசு பெண்கள் பள்ளியில் 10ம் வகுப்பு மாணவிகள் 4 பேர் கழிவறையில் சிகரெட் புகைத்துக்கொண்டிருந்ததை நேரில் பார்த்த 7ம் வகுப்பு மாணவியை மிரட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சமீபகாலமாக அரசு பள்ளி மாணவர்களின் அட்ராசிட்டி குறித்த வீடியோக்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. குறிப்பாக மாணவிகள் பீர் அருந்துவது, பள்ளி வளாகத்தில் புகைப்பிடிப்பது, பேருந்துகளில் மது அருந்துவது, பொது இடங்களில் குத்தாட்டம் போடுவது போன்ற ஒழுங்கீன செயல்களில் ஈடுபட்டு வருவது போன்ற வீடியோக்கள் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளன. இது பலரையும் முகம் சுளிக்க வைத்து வருகிறது.
இந்நிலையில், கேரளாவில் பிரபலமான அரசு பெண்கள் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 7-ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் பள்ளி கழிவறைக்கு சென்றார். அங்கு 10-ம் வகுப்பு மாணவிகள் 4 பேர் நின்று கொண்டு சிகரெட் பிடித்துக் கொண்டு இருந்தனர். ஒரே சிகரெட்டை 4 பேரும் மாற்றி, மாற்றி பிடித்து புகை விட்டுக் கொண்டு இருந்ததை பார்த்ததும் 7-ம் வகுப்பு மாணவி அதிர்ச்சி அடைந்தார்.
நீ நேரில் பார்த்ததை யாரிடமும் சொல்லக்கூடாது என 7-ம் வகுப்பு மாணவியை மிரட்டினர். மேலும் யாரிடமும் அவர் சொல்லி விடக்கூடாது என்ற அச்சத்தில் அந்த மாணவியின் தலைமுடியை கத்திரிக்கோலால் எடுத்து வெட்டி விட்டனர். ஒருவழியாக அவர்களிடம் இருந்து தப்பித்த மாணவி, தலைமை ஆசிரியரிடம் சென்று புகார் செய்தார். இதுதொடர்பாக கொல்லம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் பள்ளிக்கு நேரில் வந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் கல்வி அதிகாரிகளும் விசாரணையில் ஈடுபட்டனர். விசாரணைக்கு பிறகு குற்றம் உறுதியாகும் பட்சத்தில் மாணவர் சஸ்பெண்ட் செய்ய வாய்ப்புள்ளது.