சுமார் 100 பெண்களை பலாத்காரம் செய்ததாக கூறி வாலிபர் ஒருவரை கட்டிவைத்து அடிக்கும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வாலிபரிடம் விசாரணை நடத்த போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். நூறு பெண்களை பலாத்காரம் செய்த காமக்கொடூர இளைஞன் இவன்தான் என பேஸ்புக், வாட்ஸ்அப் போன்ற சமூக வலைதளங்களில்  ஒரு பதிவு  வந்து கொண்டிருக்கிறது. 

திருச்சியை சேர்ந்த இந்த வாலிபரால் பாதிக்கப்பட்ட 17 வயது சிறுமி ஒருவரின் குடும்பத்தினர் வாலிபர் ஒருவரை சராமாரியாக தாக்கும் வீடியோ வெளியாகியிருக்கிறது.

வாட்ஸ்அப் வீடியோவில் இடம் பெற்ற வாலிபர் திருச்சி அருகே வசித்து வருகிறார். இவரின் சித்தி வீடு மாநகருக்குள் உள்ளது. அங்கு தங்கி வேலை பார்த்த போது அப்பகுதியை சேர்ந்த ஒரு மாணவியுடன் காதல் ஏற்பட்டுள்ளது. இதில் அந்த மாணவியுடன் ஊர்சுற்றி புகைப்படம் எடுத்தது பெண்ணின் வீட்டிற்கு தெரிய வருகிறது. 

இதையடுத்து அந்த மாணவிக்கு அவசரஅவசரமாக உறவினர் ஒருவருடன் திருமணம் செய்து வைக்கின்றனர். ஆனாலும் அந்த மாணவியை தொடர்பு கொண்டு மிரட்டி பேஸ்புக்கில் படத்தை வெளியிட்டுள்ளான். இதனால் அந்த மாணவியின் குடும்பத்தினர் வேதனை அடைந்தனர். இதையடுத்து நைசாக அந்த வாலிபரை வீட்டிற்கு வரவழைத்த குடும்பத்தினர் கட்டிவைத்து செம்ம காட்டு காட்டுகின்றனர்.

அந்த வீடியோவில் ஒரு இளைஞனை  கை, கால்களை கட்டி குப்புற படுக்க வைத்து தடியால் அடிக்கின்றனர். பின்னர் உட்கார வைத்தும் அடிக்கின்றனர். பலத்த காயங்களுடன் முகமெல்லாம் வீங்கி இருக்கிறது. மேலும் பொம்பள புள்ளைங்களை ரேப் பண்ணுவியா? என்று கேட்டு, கேட்டு அடிக்கின்றனர். அவர் ரேப் பண்ண மாட்டேன், ரேப் பண்ண மாட்டேன் என்னை விட்டு விடுங்கள் என்று கெஞ்சுகிறார். 

பின்னர்  செருப்பால் அடித்தும், ரேப் பண்ணுவியா? ரேப் பண்ணுவியா? எனக்கேட்டும் அடிக்கின்றனர். இவ்வாறு அந்த வீடியோவில் பதிவாகியிருக்கிறது.  

இதுகுறித்து பேசிய போலீசார், உண்மையிலேயே அந்த வாலிபர் 100 பெண்களை பாலியல் பலாத்காரம் செய்தாரா? இந்த வீடியோ காட்சிகளை சமூக வலைதளங்களில் பரவ விட்டது யார் என்பது பற்றியும் விசாரணையில் தெரியவரும். தற்போது அந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது. இதனை மோப்பம் பிடித்த போலீசார், இருதரப்பினரையும் காவல் நிலையம்  வரவேண்டுமென கூறியிருக்கின்றனர்.