சென்னை அம்பத்தூரில் 10 வயது சிறுமிக்கு 70 வயது முதியவர் பாலியல் தொல்லை கொடுத்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  இந்நிலையில் அந்த நபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.  சென்னை அம்பத்தூர் லெனின் நகர் பகுதியில் வசித்து வந்த தம்பதியருக்கு ஆறு வயது குழந்தை,  10 வயதில் ஒரு சிறுமிய என இரண்டு மகள்கள் உள்ளனர். இருவரும் அருகில் உள்ள பள்ளிக்கூடத்தில் பயின்றுவருகின்றனர். இந்நிலையில் இவர்கள் கடந்த 30 ஆம் தேதி மாலை பக்கத்தில் உள்ள டியூஷன் சென்டருக்கு சென்றதாக தெரிகிறது. 

இந்நிலையில்  இவர்களிருவரும் டியூஷன் முடித்துவிட்டு வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தனர்.  அப்பொழுது வழியில் நின்று கொண்டிருந்த அரசு ஊழியர் சுந்தரமூர்த்தி (73) என்பவர் 10 வயது சிறுமியை தனியாக அழைத்து பேசியுள்ளார் , அவர்  திடீரென  சிறுமியின் கன்னத்தில் முத்தமிட்டு பாலியல் சில்மிஷம் செய்ததாக  தெரிகிறது.  இதனையடுத்து  சிறுமி சத்தம் போட அக்கம்பக்கத்தினர் ஓடிவந்தனர் உடனே சிறுமியை அங்கேயே விட்டுவிட்டு சுந்தரமூர்த்தி அங்கிருந்த ஓட்டம் பிடித்துள்ளார்.  இதனையடுத்து பொதுமக்கள் சிறுமிகளை மீட்டு அவர்கள் வீட்டிற்கு கொண்டு சென்றுவிட்டனர். 

விட்டில்  பெற்றோர்களிடம் நடந்ததை கூறி குழந்தைகள் அழுதனர் .  இதனையடுத்து பெற்றோர்கள் அம்பத்தூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தனர் .  உடனடியாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்ததில்  தலைமறைவாக இருந்த சுந்தர மூர்த்தியை கைது செய்து பின் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர் .