தோல்வி பயத்தில் தற்கொலை செய்து கொண்ட மாணவி தேர்வில் தேர்ச்சி அடைந்துள்ளது உறவினர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின. இதில் 98.53 சதவிகித தேர்ச்சியுடன் திருப்பூர் மாவட்டம் முதலிடத்தைப் பிடித்துள்ளது. 95.2 சதவிகித மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர். கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது. தேர்வு முடிவுகள் வெளியாவதற்கு முன்பாகவே காஞ்சிபுரத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

காஞ்சிபுரத்தில்  மாவட்டம் மதுராந்தகம் அருகேயுள்ள தண்டரைப்பேட்டைக் கிராமத்தைச் சேர்ந்த 10ஆம் வகுப்பு மாணவி சந்தியா, தேர்வு தோல்வி பயத்தில் இன்று அதிகாலை அவரது வீட்டில் தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ஆனால் இன்று வெளியான தேர்வு முடிவில் அவர் அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி பெற்றுள்ளது தெரியவந்துள்ளது. அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி பெற்ற சந்தியா 500க்கு 191 மதிப்பெண் பெற்றுள்ளார். எனினும் அவர் தேர்வு முடிவுக்கு முன்பே தற்கொலை செய்து கொண்டது  அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.