வாணியம்பாடி பகுதியில் பெற்ற குழந்தையை இடைத்தரகர் மூலம் ஒரு லட்ச ரூபாய்க்கு விற்ற தாய் கணவர் புகாரின் பேரில் குழந்தையை மீட்டு வாணியம் பாடி போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.பெற்ற குழந்தையை புரோக்கர் மூலம் 1 லட்ச ரூபாய்க்கு விற்ற தாய் கணவர் புகாரின் பேரில் குழந்தையை மீட்டு வாணியம்பாடி போலீசார் நடவடிக்கை எடுத்தனர். 

முதல் கணவனுக்கு தெரியாமல், வேறொருவருடன் தொடர்பு வைத்துக்கொண்டு முதல் புருஷனை கழட்டி விட்டுவிட்டு, இரண்டாவது புருஷனுடன் வாழ்ந்து வந்துள்ளார். மூன்றாவதாக  முருகன் என்பவருடன் தொடர்பு ஏற்பட நாளடைவில் இரண்டாவது புருஷனையும் விட்டுவிட்டு, மூன்றாவதாக முருகனுடன் வாழ்ந்து வந்தார். இந்நிலையில் இவர்களுக்கு  ஒரு வருடத்துக்கு முன்பு ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது. 

இந்த சமயத்தில், முருகனுக்கு காசநோய் வந்துவிட்டது. அதனால், தர்மபுரி மருத்துவமனையில் தங்கியிருந்து சிகிச்சை எடுத்து கொண்டு, திரும்பவும் ஊர் திரும்பினார். ஊருக்கு வந்து பார்த்தால்,குழந்தையை காணோம். இதை பற்றி சத்யாவிடம் கேட்டதற்கு, பதில் சொல்லாமல் மழுப்பியுள்ளார். பொறுமையிழந்த மூணாவது கள்ளப்புருஷன் முருகன், வாணியம்பாடி போலீசாரிடம் புகார் கொடுத்தார்.

விரைந்து வந்த போலீசார் சத்யாவை அழைத்து விசாரித்த போது தான் திடுக் தகவல் வெளிப்பட்டது. அவர் கூறிய வாக்குமூலத்தில் என் பெரியம்மா கீதா மூலமா கவிதான்னு ஒரு புரோக்கர் எனக்கு அறிமுகம் கிடைச்சாங்க. குழந்தையை பெங்களூரை சேர்ந்த ரஹமத் சகிலா தம்பதியினர் கேட்பதாக சொன்னதால், அதனால குழந்தையை 2 மாசத்துக்கு முன்னாடியே.. ஒரு லட்சத்துக்கு வித்துட்டேன், அதற்காக 65 ஆயிரம் ரூபாய் அட்வான்ஸும் வாங்கிட்டேன் என்றார்.