Asianet News TamilAsianet News Tamil

கோவிட்-19: அமெரிக்க அரசியல் புதைக்கப்படுமா? அம்பலப்படுமா?

கொரோனா வைரஸ் உருவாக்கப்பட்ட விவகாரத்தில் அமெரிக்க அரசியல் புதைக்கப்படுமா? அல்லது அம்பலப்படுமா? என்று துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி நியூ இந்தியன்ஸ் எக்ஸ்பிரஸில் எழுதிய கட்டுரையின் தமிழாக்கம்.
 

will usa politics bury or expose in covid 19 issue
Author
Chennai, First Published May 30, 2021, 10:31 PM IST

கொரோனா வைரஸ் உருவாக்கப்பட்ட விவகாரத்தில் அமெரிக்க அரசியல் புதைக்கப்படுமா? அல்லது அம்பலப்படுமா? என்று துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி நியூ இந்தியன்ஸ் எக்ஸ்பிரஸில் எழுதிய கட்டுரையின் தமிழாக்கம்.

மதிப்பிற்குரிய அறிவியல் எழுத்தாளர் நிகோலஸ் வேட் நிறைய விஷயங்களை வெளிக்கொண்டுவந்தார். வைராலஜிஸ்ட் சங்கத்தை குழப்பியது எப்படி, உலக சுகாதார நிறுவனத்திற்கு கையூட்டு கொடுத்து வசப்படுத்தியது எப்படி, டொனால்ட் டிரம்புக்கு எதிரான மீடியாக்கள் மௌனம் காத்தது, பிரிவினைவாத அமெரிக்க அரசியல் குற்றவாளியை தப்பிய உதவியது ஆகிய விஷயங்களை தெளிவுபடுத்தியுள்ளார்  நிகோலஸ் வேட். ஒரு ஒழுக்கமான, பொறுப்பான எழுத்தாளராக, சென்சிட்டிவான விஷயமான வூஹான் வைராலஜி இன்ஸ்டிடியூட் மற்றும் சீன ராணுவத்திற்கு இடையேயான தொடர்பு குறித்து எழுதவில்லை. அமெரிக்கா - சீனாவின் துணிகர, ஆபத்தான முன்னெடுப்பு, அந்த நாடுகளை மட்டுமல்லாது உலகையே ஆபத்தில் தள்ளியுள்ளது.

ஒருதலைக்காதல்:

தாங்கள் ஒரு சந்தை பொருளாதார நாடு என்று அமெரிக்காவிடம் பாசாங்கு செய்த சீனா, உலக வர்த்தக அமைப்பில்(WTO) தங்கள் நாட்டை சந்தை பொருளாதாரம் என்று அறிவிக்க அமெரிக்காவின் மண்டையை கழுவியது.  அதன்படி 2001ல் உலக வர்த்தக அமைப்பில் சீனாவை சந்தை பொருளாதார நாடு என்றது அமெரிக்கா. அதிலிருந்து சரியாக 18 ஆண்டுகள் கழித்து 2019ல் அமெரிக்காவும், ஐரோப்பிய யூனியனும் சீனா சந்தை பொருளாதார நாடு இல்லை என்று உலக வர்த்தக அமைப்பிடம் கதறியது. அதைத்தொடர்ந்து சீனா சந்தை பொருளாதார நாடு இல்லை என்று அறிவித்தது WTO. இந்த சம்பவம், அமெரிக்காவின் குறுகிய பார்வையையும், சீனாவின் தொலைநோக்கு பார்வையையும் காட்டுகிறது. 

டொனால்ட் டிரம்ப்பின் வருகை அமெரிக்காவிற்கு மிக தாமதம். டிரம்ப் அமெரிக்க அதிபராவதற்கு முன்பே, கமர்சியல் விஷயங்களில் சீனாவை அதிகம் சார்ந்திருக்கும் நிலைக்கு அமெரிக்கா சென்றுவிட்டது. அதன்மூலம் சீனாவின் மீதான செல்வாக்கையும் அமெரிக்கா இழந்துவிட்டது. நிறைய விவகாரங்களில் சீனாவும் அமெரிக்காவும் இணைந்து செயல்பட்டன. ஆனால் அமெரிக்காவுடன் இணைந்து செயல்பட்ட விவகாரங்களிலேயே பல விஷயங்களை வெளிப்படுத்தாமல் மறைமுகமாக செயல்பட்டது சீனா. அதிக கவனம் வாய்ந்த சீனா, கவனக்குறைவான அமெரிக்காவுடன் இணைந்து தந்திரமாக கொரோனா வைரஸ் ஆராய்ச்சியை மேற்கொண்டது. அதன் விளைவு, இருநாடுகளையும் பாதித்தாலும் கூட, அமெரிக்காவிற்குத்தான் அதிக பாதிப்பு.

இந்த விவகாரத்தில் அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையே என்ன உரையாடல் நடந்திருக்கும் என்பதை வேட் கற்பனை செய்திருக்கிறார். 

சீனா: இந்த வைரஸ் ஆராய்ச்சி ஆபத்தானது என்றால், அதற்கு நீங்கள்(அமெரிக்கா) ஏன் நிதி வழங்கினீர்கள்? அதுவும் எங்கள் நாட்டில் ஆராய்ச்சி மேற்கொள்ள..

அமெரிக்கா: நீங்கள்(சீனா) தான் திட்டமிட்டே இந்த வைரஸை பரப்பிவிட்டதாக தெரிகிறது. ஆனால் நாம் பப்ளிக்காக இதைப்பற்றி விவாதிக்கவா வேண்டும்..?

முடிவில் சீனா வூஹான் ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டதுதான் இந்த வைரஸ் என்ற உண்மையை புதைப்பதில் உறுதியாக இருந்தது. அதற்கு அமெரிக்காவும் வேறு வழியில்லாமல் உடன்பட்டுவிட்டது.

வைராலஜிஸ்ட்டுகளின் அடக்குமுறை:

இப்போது விஞ்ஞானிகள் கழகத்தை பற்றி பார்ப்போம். வூஹான் வைராலஜி இன்ஸ்டிடியூட்டில்(WIV) இருந்துதான் வைரஸ் பரவியுள்ளது என்ற தகவல் வெளியானதுமே, வைராலஜிஸ்ட்டுகள், 2020 பிப்ரவரி 9ம் தேதி லான்செட்டில், WIV-ல் இருந்துதான் கோவிட் 19 வைரஸ் பரவியது, இயல்பாக உருவாகியிருப்பதற்கான வாய்ப்பில்லை என்ற தியரிக்கு எதிராக குரல் கொடுத்ததுடன்,  விலங்குகளிடமிருந்துதான் பரவியது என்று கூறி, அதையே நிறுவ முயற்சித்தனர். இந்த வைரஸ் ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டதல்ல; அதற்கான வாய்ப்பே இல்லை என்று வைராலஜிஸ்ட்டுகள் தொடர்ச்சியாக பத்திரிகைகளில் கட்டுரை எழுதினர். 

உலக சுகாதார நிறுவனத்தின் செயல்பாடு:

உலக சுகாதார அமைப்பின் ரோலை ஆராய்வோம். முதலில், அந்த வைரஸ் இயற்கையாக உருவானதுதான்; உருவாக்கப்பட்டதல்ல என்று சித்தரிக்கும் விதமாக பெயர் சூட்டியது. அடுத்தது, அந்த வைரஸ் இயல்பாக உருவானதா அல்லது மனிதனால் உருவாக்கப்பட்டதா என்ற WHO கமிஷன் ஆய்வு சீன அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் நடந்தது. 

WHO ஆய்வில் அந்த வைரஸ் இயல்பாக உருவானதா அல்லது மனிதனால் செயற்கையாக உருவாக்கப்பட்டதா என்ற ஆய்வில் திடமான முடிவே எட்டப்படவில்லை. ஆனால் இதுவே சீனா எதிர்பார்த்த வெற்றி என்று கூற முடியாது. அது மனிதனால் உருவாக்கப்பட்டதல்ல என்ற முடிவே சீனாவிற்கு தேவையானது.  அதற்கான அனைத்து முயற்சிகளையும் சீன அதிகாரிகள் எடுத்தனர். கொரோனா வைரஸ் உருவாக்கப்பட்ட WIV-யை மூடி சீல் வைத்தனர். WHO-வின் வைரஸின் மூலாதாரம், பிறப்பிடத்தை கண்டறியும் ஆய்வை திசைதிருப்பும் விவகாரத்தை சிறப்பாக கையாண்டது சீனா. வைரஸ் பரவலுக்கான மூலாதாரத்தை திசைதிருப்புவதிலேயே அதிக கவனம் செலுத்திய சீனா, இரண்டாவது அலையை தடுப்பதில் கவனம் செலுத்தவில்லை. 

மீடியாக்கள் அனைத்துமே இந்த வைரஸ் இயற்கையாக தோன்றியது என்ற கோட்பாட்டிலேயே செயல்பட்டன. 2021 பிப்ரவரியில் WHO கமிஷன் சீனாவிற்கு செல்லும் வரை அதே கோட்பாட்டில் இருந்தது தொடர்பாக எந்த கேள்வியும் எழுப்பப்படவில்லை. WHO மிஷன், கடைசி வரை எந்த உண்மையையும் கண்டறியவும் இல்லை. அதேவேளையில் சீனாவிற்கு ஆதரவாக செயல்பட்டது என்றும் கூறிவிடமுடியாது. WHO அதன் செயல்பாடுகளில் மதிப்பை இழந்துவிட்டது.

பிரிவினை அமெரிக்கா.. மௌனம் காத்த மீடியா

அமெரிக்காவில் 3.5 லட்சம் உயிர்களை காவுவாங்கிய ஒரு வைரஸ் குறித்த ஆழமான செய்திகளே அமெரிக்க ஊடகங்களில் வெளியிடப்படவில்லை. அமெரிக்க ஊடகங்கள் அனைத்தும் இந்த வைரஸ் உருவான மூலாதாரத்தை கண்டறியும் விஷயத்தில் மௌனம் காத்தன. அதற்கு 2 காரணங்கள் இருக்கின்றன. 1. வைராலஜிஸ்ட்டுகளின் கருத்து, 2. வூஹான் ஆய்வகத்தில் இருந்துதான் அந்த வைரஸ் பரவியது என்ற டொனால்ட் டிரம்ப்பின் கருத்துக்கு எதிரான நிலைப்பாடு. ஊடகங்கள் அனைத்தும் வைராலஜிஸ்ட்டுகளின் கருத்துக்கு முக்கியத்துவம் கொடுத்தன. 

வூஹான் வைராலஜி இன்ஸ்டிடியூட் - சீன ராணுவம் இடையேயான தொடர்பு:

ஒழுக்கமான அறிவியல் எழுத்தாளராக, WIV-லிருந்து இந்த வைரஸ் எப்படி பரவியது என்பதை பற்றி மட்டுமே பேசியிருக்கிறார். பிரேசில் அதிபர் ஜெய்ர் பால்சோனாரோ வெளிப்படையாகவே, கொரோனா வைரஸ் பயோ போருக்கான ஆயுதம் என்றும், கோவிட் 19 பயோ போர் என்றும் வெளிப்படையாகவே குற்றம்சாட்டியிருந்தார். சீன ராணுவத்துடன் இணைந்து 2015லிருந்தே WIV திட்டமிடுகிறது. எனவே அந்தவகையில், கொரோனா வைரஸை பரப்பியதில் சீன ராணுவத்தின் பங்கும் இருப்பதாகவே பார்க்கப்படுகிறது. இந்தியாவை விட பிரேசிலின் இறப்பு விகிதம் 10 மடங்கு அதிகம். எனவே தான் இதுவொரு பயோ போர் என்பதை கடுங்கோபத்துடன் வெளிப்படையாக தெரிவித்தார் பிரேசில் அதிபர்.

உலக நாடுகளும் சீனாவும்:

ஆரோக்கியம், அமைதி, வாழ்வாதாரம், மனிதகுலத்தின் நிறைய குடும்பங்கள் இந்த வைரஸால் அழிந்தன. பல பெரிய நாடுகளின் பொருளாதாரம் சீரழிந்தது. சீனாவிலிருந்து உலகிற்கு பரப்பப்பட்ட இந்த வைரஸ் பாரபட்சமில்லாமல் உலகளவில் மொத்த மனிதகுலத்தையும் பாதித்தது. உலகிற்கே கொரோனாவை பரப்பிய சீனாவின் பொருளாதார வளர்ச்சிக்கு எந்த பங்கமும் ஏற்படவில்லை. ஆனால் சீனாவால் பரப்பப்பட்ட வைரஸால் உலகமே பெரும் பாதிப்பை சந்தித்துள்ளது.

அமெரிக்கா - சீனா அரசியல் புதையுமா? அம்பலப்படுமா?

பிரிவினை அமெரிக்கா மற்றும் சீனாவுடனான அதன் உறவு குறித்து பார்ப்போம். அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் தேசிய புலனாய்வு இயக்குநர் அவ்ரில் ஹைன்ஸ், WIV ஆய்வகத்திலிருந்து வைரஸ் பரப்பப்பட்டதை மறுக்க முடியாது என்று கூறியுள்ளார். பைடனின் அமெரிக்க அரசும், மீடியாவும் இயற்கையாக வைரஸ் பரவியது என்ற தியரி குறித்து கேள்வி எழுப்புகின்றன.

ஆய்வகத்தில் இருந்துதான் இந்த வைரஸ் வெளிப்பட்டது என்பதை மறுக்கமுடியாது என்று ஃபௌசி தெரிவித்தார். வால் ஸ்ட்ரீட் ஜர்னல்(WSJ), டொனால்ட் டிரம்ப் ஆட்சிக்காலத்தில் வைரஸ் பரவ தொடங்குவதற்கு முந்தைய Fact ஷீட்டை வெளியிட்டிருந்தது. 2019 நவம்பர் மாதத்திலேயே WIV ஆய்வாளர்கள் கோவிட் 19 அறிகுறிகளுடன் மருத்துவமனைகளில் தொற்றுடையவர்கள் அட்மிட் ஆகியுள்ளனர். 2018ல் வூஹான் வைராலஜி இன்ஸ்டிடியூட்டிற்கு(WIV) சென்ற அமெரிக்க அதிகாரிகள், வௌவாலிலிருந்து உருவாக்கப்பட்ட கொரோனா வைரஸ்கள் மனித செல்களை எளிதில் தாக்கக்கூடியது என்று WIV ஆய்வாளர்களை எச்சரித்துள்ளனர். ஆனால் அமெரிக்காவின் எச்சரிக்கையை WIV ஆய்வாளர்கள் மதிக்கவில்லை.

ஜோ பைடன் அமெரிக்க அரசும், மீடியாக்களும் உண்மையை பேச வேண்டிய கட்டாயத்தில் உள்ளன. ஆனால் அதை செய்வார்களா? அல்லது உண்மையை புதைப்பார்களா?
 

Follow Us:
Download App:
  • android
  • ios