கொரோனா முடிந்தது;ஒமைக்ரான் வீரியம் குறைந்தது என்பதே ஆபத்தானது: டெட்ராஸ் அதானம் கெப்ரியாசிஸ் எச்சரிக்கை
தடுப்பூசியை அதிகமானோர் செலுத்தியதால் கொரோனா பரவல் முடிந்துவிட்டது, ஒமைக்ரான் வீரியம் குறைந்தது என்று நினைப்பதும், அவ்வாறு பேசுவதும் ஆபத்தானது என உலக சுகாதாரஅமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதானம் கெப்ரியாசிஸ் எச்சரித்துள்ளார்.
தடுப்பூசியை அதிகமானோர் செலுத்தியதால் கொரோனா பரவல் முடிந்துவிட்டது, ஒமைக்ரான் வீரியம் குறைந்தது என்று நினைப்பதும், அவ்வாறு பேசுவதும் ஆபத்தானது என உலக சுகாதாரஅமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதானம் கெப்ரியாசிஸ் எச்சரித்துள்ளார்.
முனிச் நகரில் நடந்து வரும் முனிச் பாதுகாப்பு மாநாட்டில் உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதானம் கெப்ரியாசிஸ் பங்கேற்றார். அப்போது விரைவில் குணமடைவோம்; பெருந்தொற்றிலிருந்து வெளியேற வழிதேடுவோம்” என்ற தலைப்பில் கெப்ரியாசிஸ் பேசியதாவது:
இப்போதுள்ள சூழலில் சில நாடுகளில் பெருசதவீத மக்கள் தடுப்பூசி செலுத்திவிட்டதால் கொரோனா முடிந்துவிட்டது என்றும், ஒமைக்ரான் பரவல் தீவிரம் குறைந்தது எனவும் நினைத்திருப்பதுதான் ஆபத்தானது.
பெருந்தொற்றின் வீரியத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் வாரந்தோறும் உலகளவில் 70ஆயிரம் பேர் உயிரிழந்து வருகிறார்கள். ஆப்பிரிக்கப் பகுதியில் 83 சதவீதம் பேர் இன்னும் ஒரு டோஸ் தடுப்பூசிக்கூட செலுத்திக்கொள்ளவில்லை. உலகளவில் சுகாதாரச் செயல்முறை வேதனையாகவும், கொரோனா அதிகரிப்பால் சிக்கலில்தான் இருக்கிறது
கொரோனாவுக்கு உகுந்த சூழலை மக்கள் உருவாக்கினால், விரைவாக பரவக்கூடிய, மோசமான உயிர்சேதங்களை உருவாக்கக்கூடிய உருமாற்ற வைரஸ் உருவாகலாம். உலகளவில் சுகாதார அவசர நிலையை இந்த ஆண்டுடன் நாம் முடிக்க முடியும். அதற்கான கருவிகள், நமக்குத் தெரியும்.
தடுப்பூசியை உலக மக்களுக்கு வழங்குவதர்கு தேவையான நிதியை அனைத்து நாடுகளும் வழங்கிட வேண்டும். அதற்கு 1600 கோடி டாலர் பற்றாக்குறை நிலவுகிறது. தேசிய அளவிலும், உலகளவிலும் சுகாதாரத்தை வலுப்படுத்தும் வளங்கள் நமக்கு தேவைப்பட்டன. இந்த பெருந்தொற்றை முடிவுக்கு கொண்டுவருவதுதான் நமது இலக்கு, கடந்த காலங்களில் நமக்கு கிடைத்த அனுபவங்களில் இருந்து நாம் கண்டிப்பாகக் கற்றுக்கொள்ள வேண்டும்.
குழப்பமும், ஒத்துழைப்பின்றி தொடர்பின்றி இருத்தல்தான் பெருந்தொற்றை மேலும் வளர்க்கும். பொதுவான அச்சறுத்துல்களை எதிர்கொள்வதில் நமக்கு ஒத்துழைப்பும், கூட்டுழைப்பும் தேவை. பெருந்தொற்றையும், கொள்ளைநோயையும் விரைந்து தடுக்க, கண்டுபிடிக்க, பதிலடி கொடுக்க வலிமையான சுகாதார அமைப்பு முறை, கருவிகள் தேவை.
கொரோனா பெருந்தொற்று எப்போது முடியும் என்றால், நாம் எப்போது முடிவைத் தேர்வு செய்கிறோமோ அப்போது முடியும். ஏனென்றால், இது வாய்ப்பின் அடிப்படையில் இல்லை, தேர்வின் அடிப்படையில் இருக்கிறது
இவ்வாறு டெட்ராஸ் அதானம் கெப்ரியாசிஸ் தெரிவித்தார்