கெட்டியா பிடிச்சிக்கோங்க... மக்களுக்கு வலுக்கட்டாயமாக கொரோனா டெஸ்ட் எடுக்கும் சீனா.. வைரலாகும் பகீர் வீடியோ..!

வீடியோக்களில் ஒன்று தற்போது ட்விட்டர் தளத்தில் வைரல் ஆகி வருகிறது. வைரல் வீடியோவில் நபர் ஒருவர் பெண்ணை கட்டாயப்படுத்தி கொரோனா பரிசோதனையை மேற்கொள்ள வைக்கிறார். 

Viral Video Chinese Woman Pinned Down, Covid Test Done Forcibly

சீனாவில் வசிக்கும் மக்கள் கொரோனா வந்தாலும் பரவாயில்லை, ஊரடங்கு பிறப்பிக்கப்படக் கூடாது என நினைக்க தொடங்கி விட்டனர். மேலும் கொரோனா வைரஸ் பாதிப்பை விட ஊரடங்கு பாதிப்பு தான் மிகவும் அச்சத்தை ஏற்படுத்துகிறது என கூறுகின்றனர். சீன மக்களின் உணர்வை ஆதரிக்க ஏராளமான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வலம் வர துவங்கி உள்ளன. இவை பெரும்பாலும் ஷாங்காய் மற்றும் இதர பகுதிகளில் எடுக்கப்பட்டவை ஆகும்.

இவ்வாறு வெளியான வீடியோக்களில் ஒன்று தற்போது ட்விட்டர் தளத்தில் வைரல் ஆகி வருகிறது. வைரல் வீடியோவில் நபர் ஒருவர் பெண்ணை கட்டாயப்படுத்தி கொரோனா பரிசோதனையை மேற்கொள்ள வைக்கிறார். 

வைரல் வீடியோ:

வீடியோ துவக்கத்திலேயே பெண் ஒருவர் தரையில் படுத்துக் கொண்டு இருப்பதும், அவரின் மேல் நபர் ஒருவர் அமர்ந்து கொண்டு இருப்பதும் காட்சியாக்கப்பட்டு இருக்கிறது. பரிசோதனை மையம் போன்று காட்சி அளிக்கும் அந்த பகுதியில் பரிசோதனைக்கு உட்படுத்தப்படும் பெண் கத்தி கூச்சலிடுகிறார். அவரின் மேல் அமர்ந்து கொண்டிருக்கும் நபர், பெண்ணின் கைகளை இழுத்துப் படித்து அவரின் முட்டிகளால் அழுத்திப் பிடித்துக் கொள்கிறார். 

அதன் பின் பெண்ணின் வாயை வலுக்கட்டாயமாக திறந்து பிடிக்கிறார். இப்போது அங்கு இருந்த சுகாதார ஊழியர் அந்த பெண்ணிடம் பரிசோதனைக்கான சாம்பிலை எடுக்கிறார். இந்த வீடியோ மட்டுமின்றி இதே போன்று பலருக்கும் சீனாவில் வலுக்கட்டாயமாக கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதாக பலர் குற்றம்சாட்டி வருகின்றனர். மேலும் இதனை உறுதிப்படுத்தும் வகையில் ஏராளமான வீடியோக்களும் ட்விட்டர் தளத்தில் வெளியாகி வருகின்றன.

போக்குவரத்து நிறுத்தம்:

இந்த வீடியோ எங்கு எடுக்கப்பட்டது என்பது பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை. எனினும், ஷாங்காய் நகரில் மிக கடுமையான ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு இருக்கும் நிலையில், இந்த வீடியோக்கள் வெளியாகி வைரல் ஆகி வருகின்றன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சீனா தலைநகர் பீஜிங்கிலும் 40-க்கும் அதிக சப்வே ஸ்டேஷன்கள் மூடப்பட்டுள்ளன. இத்துடன் பேருந்து சேவையும் நிறுத்துப்பட்டு உள்ளது.

இந்த வாரம் 16 பீஜிங் மாவட்டங்களை சேர்ந்த 12 இடங்களில் இரண்டாம் கட்ட பரிசோதனைகள் நடத்தப்பட இருக்கின்றன. சீனாவில் மொத்தம் மூன்று கட்டங்களாக கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இத்துடன் ஷாங்காய் நகரில் ஊரடங்கு எப்போது நிறைவு பெறும் என்பது பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை. ஒரு மாதத்திற்கும் மேலாக சீனாவின் மிகப்பெரிய நகரமான மெயின்லாந்தில் இருந்து மக்கள் தங்களின் வீடுகளை விட்டு வெளியே வர அனுமதிக்கப்படவில்லை.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios