Asianet News TamilAsianet News Tamil

கொரோனா நிவாரண உதவி வழங்க திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் குருக்கள்களைச் சந்தித்த உதயநிதி..!

கொரோனா ஊரடங்கு காரணமாக திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோயில் குருக்கள்களுக்கு அரிசி-பருப்பு உள்ளிட்ட நிவாரண பொருட்களை அத்தொகுதி எம்.எல்.ஏ. உதயநிதி ஸ்டாலின் வழங்கியுள்ளார்.
 

Udayanithi meets Tiruvallikeni Parthasarathy temple priests to provide corona relief aid ..!
Author
Chennai, First Published May 22, 2021, 10:01 PM IST

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிரம்மாண்ட வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். எம்.எல்.ஏ. பொறுப்பை ஏற்றதிலிருந்து இத்தொகுதியில் கொரோனா கால ஊரடங்கு நிவாரண உதவிகளை தினந்தோறும் செய்துவருகிறார். இந்நிலையில் இன்று திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் குருக்கள்களுக்கு தேடிச் சென்று நிவாரண உதவிகளை உதயநிதி ஸ்டாலின் வழங்கியுள்ளார்.Udayanithi meets Tiruvallikeni Parthasarathy temple priests to provide corona relief aid ..!
இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் படங்களுடன் நிலைத்தகவலைப் பகிர்ந்துள்ளார். அதில், “கொரானா ஊரடங்கால் கோயில்கள் அனைத்திலும் பொதுமக்கள் தரிசனம் தடைசெய்யப்பட்டுள்ள நிலையில், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் உள்ள திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோயில் குருக்கள்களுக்கு அரிசி-பருப்பு உள்ளிட்ட ஊரடங்கு கால நிவாரணப் பொருட்களை இன்று வழங்கினோம்” என்று தெரிவித்துள்ளார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios