CORONA BREAKING : நற்செய்தி.. இந்தியாவில் மேலும் 2 புதிய கொரோனா தடுப்பூசிகள்... அனுமதி அளித்தது மத்திய அரசு..
இந்தியாவில் ஒரே நாளில் இன்று மேலும் 2 கொரோனா தடுப்பூசிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் கீழ் உள்ள மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு (சிடிஎஸ்சிஓ) கொரோனா தடுப்பூசிகளான கோவோவாக்ஸ் & கார்பேவாக்ஸ் மற்றும் வைரஸ் எதிர்ப்பு மருந்தான மோல்னுபிராவிர் போன்றவற்றின் அவசரகால பயன்பாட்டு அங்கீகாரத்துக்கு அனுமதி வழங்கியுள்ளது.
கோர்பிவேக்ஸ் மற்றும் கோவோவேக்ஸ் ஆகிய இரண்டு தடுப்பூசிகளுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதன் மூலம் தடுப்பூசி செலுத்தும் பணிகளை மேலும் வேகப்படுத்த முடியும். கொரோனாவால் பாதிக்கப்படுவோருக்கு சிகிச்சை அளிக்கும் மால்னுபிரவிர் மருந்துக்கும் மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.இதனை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டாவியா அறிவித்து இருக்கிறார்.
இந்தியாவில் இது வரையில் 147 கோடிக்கும் அதிகமானோருக்கு ஒரு தவணை தடுப்பூசியாவது செலுத்தப்பட்டுள்ளது என்று மத்திய சுகாதாரத் துறை நேற்றைய தினம் அறிவித்திருந்தது. இந்தியாவை 100 சதவிகிதம் தடுபூசி செலுத்திக் கொண்டோர் நாடாக அறிவிக்கும் பெரும் முயற்சியில் மத்திய அரசு தீவிரம் காட்டி வரும் நிலையில், புதிதாக இரண்டு தடுப்பூசிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால் விரைவில் அந்த இலக்கை அடைய முடியும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது.