தமிழகத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4வது நாளாக ஆயிரத்துக்கும் கீழ் குறைந்துள்ளது. அந்த வகையில் தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 618 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  

தமிழகத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4வது நாளாக ஆயிரத்துக்கும் கீழ் குறைந்துள்ளது. அந்த வகையில் தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 618 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

தமிழகத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஆயிரத்துக்கும் கீழ் குறைந்துள்ளது. அந்த வகையில் தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 618 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று ஒரு நாள் பாதிப்பு 671 ஆக இருந்த நிலையில் இன்றைய கொரோனா உறுதியானவர்களின் எண்ணிக்கை 618 ஆக குறைந்துள்ளது. 62,549 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 618 ஆக உள்ளது. சென்னையில் மட்டும் 156 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் ஏற்கனவே 169 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று கொரோனா எண்ணிக்கை 156 ஆக குறைந்துள்ளது.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 4 பேர் உயிரிழந்துள்ளார். கொரோனாவால் இன்று 4 பேர் உயிரிழந்த நிலையில் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 37,993 ஆக உள்ளது. தமிழகத்தில் கொரோனா சிகிச்சையில் இருப்போர்10,782 ஆக உள்ளது. கொரோனா தொற்றிலிருந்து மேலும் 2,153 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதன் மூலம் குணமடைந்தோர் எண்ணிக்கை 33,98,231 ஆக உள்ளது.

சென்னைக்கு அடுத்தபடியாக கோவையில் ஒருநாள் கொரோனா பாதிப்பு தற்போது 87 ஆக குறைந்துள்ளது. அதே போல் செங்கல்பட்டில் ஒருநாள் கொரோனா பாதிப்பு தற்போது 72 ஆக குறைந்துள்ளது.திருவள்ளூர் 28,ஈரோடு 27, சேலம் 21, நீலகிரி 19, திருச்சி 18,திருப்பூர் 17, காஞ்சிபுரம் 16 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதேபோல் தமிழக மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா தொற்று பதிவாகியுள்ளது.