India Corona:50 ஆயிரத்துக்கு கீழ் குறைந்த கொரோனா..ஒரே நாளில் 44,877 பேர் பாதிப்பு.. பரவல் விகிதம் 3.17% ..

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 44,877 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. ஒரே நாளில் ஒரு லட்சம் பேர் குணமடந்துள்ளனர்.
 

Today corona case report

இந்தியாவில் அன்றாட கொரோனா தொற்று 44,877 என்றளவில் உள்ளது. சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கையும் 5,37,045 ஆக சரிவடைந்துள்ளது.

நாடுமுழுவதும் பிப்ரவரி தொடக்கத்தில் இருந்தே அன்றாட கொரோனா பாதிப்பு குறையத் தொடங்கியது. இதனால் எல்லா மாநிலங்களிலும் படிப்படியாக தளர்வுகள் அமலாகியுள்ளன. இதன் தொடர்ச்சியாக கொரோனா பரவலும் வெகுவாக குறைந்து வருகிறது.

இந்தநிலையில் கடந்த 24 மணி நேரத்தில் நாடுமுழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் குறித்த விவரங்களை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 44,877 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. நாடு முழுவதும் கொரோனா சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கையும் 5,37,045 ஆக சரிவடைந்துள்ளது. கொரோனா பாதிப்பு அல்லது பரவல் விகிதம் 3.17% என்றளவில் உள்ளது.

இந்தியாவில் இதுவரை கொரோனாவால் பாதித்தோர் மொத்த எண்ணிக்கை 42,631,421 ஆக உள்ளது.கடந்த 24 மணி நேரத்தில் 1,17,591 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்தனர். இதனால் இதுவரை கொரோனா பாதித்து குணமடைந்தோர் எண்ணிக்கை 4,15,85,711 ஆக அதிகரித்துள்ளது. மேலும் கொரோனா பாதித்து குணமடைந்தோர் விகிதம் 97.55 சதவீதமாக உயர்ந்துள்ளது.

அதுபோல் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றினால் 684 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 5,08,665 ஆக உள்ளது. இதுவரை நாடு முழுவதும் 1.72 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. நாடு முழுவதும் நேற்று ஒரு நாளில் 49,16,801 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இவர்களில் பூஸ்டர் டோஸ் செலுத்தியவர்கள் எண்ணிக்கை 3,32,764 ஆக உள்ளது. 15-18 வயது கொண்டவர்களில் பேருக்கு 16,65,792 தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios