India corona : கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில்  17,070 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  

இதுக்குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின் படி, கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 17,070 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று 18,819 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், இன்று ஒரே நாளில் 17,070 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கபட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4,34,69,234 ஆக அதிகரித்துள்ளது. 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

மேலும் படிக்க:ஜெட் வேகத்தில் உயரும் கொரோனா பாதிப்பு.. தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகள்? முதல்வர் அவசர ஆலோசனை.!

மேலும் படிக்க:மக்களே உஷார்.. தமிழகத்தில் கட்டுக்கடங்காத வேகத்தில் கொரோனா.. மீண்டும் பள்ளிகளில் இவையெல்லாம் கட்டாயம்.!

மேலும் படிக்க:தமிழகத்தில் 2000-ஐ கடந்தது தினசரி பாதிப்பு… சென்னையில் 909 பேருக்கு தொற்று!!

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றிலிருந்து 14,413 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் இதுவரை கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 4,28,36,906 ஆக உள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 1,07,189 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 24 பேர் உயிரிழந்துள்ளனர். நாட்டில் இதுவரை கொரோனாவிற்கு பலியானவர்களின் எண்ணிக்கை 5,25,139 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் 197.74 கோடி கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 11,67,503 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.