தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1192 ஆக பதிவாகி உள்ளது.

சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1192 ஆக பதிவாகி உள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்று குறைந்து கொண்டே வருகிறது. ஆனாலும் கொரோனா தடுப்பூசி போடும் பணிகளும் வேகப்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்த வாரம் சனிக்கிழமை தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பூசி மெகா முகாம் நடத்தப்படுகிறது. அதற்கான ஏற்பாடுகளும் நடந்து வருகின்றன.

இந் நிலையில், கொரோனாவின் பாதிப்பு லேட்டஸ்ட் விவரங்களை சுகாதாரத் துறை வெளியிட்டு உள்ளது. இது குறித்து செய்தி குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:

கடந்த 24 மணி நேரத்தில் 1192 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. கடந்த சில நாட்களுடன் ஒப்பிட்டால் இன்று 1200க்கும் கீழ் கொரோனா குறைந்துள்ளது. 13 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.

அவர்களில் 9 பேர் அரசு மருத்துவமனையிலும், 4 பேர் தனியார் மருத்துவமனையிலும் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் ஒட்டு மொத்த பலி எண்ணிக்கை 35,912 ஆக உயர்ந்துள்ளது.

இன்னமும் கொரோனா சிகிச்சையில் 14,570 பேர் இருக்கின்றனர். 1423 பேர் குணம் பெற்றுள்ளனர். ஒட்டுமொத்தமாக 26,37,802 ஆக உயர்ந்து இருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.