2024 ஆம் ஆண்டு வரை கொரோனா நீடிக்கலாம்… எச்சரிக்கை விடுத்தது பைசர் நிறுவனம்!!

ஒமைக்ரான் வைரஸ் பரவல் காரணமாக கொரோனா பெருந்தொற்று 2024 ஆம் ஆண்டு வரை நீடிக்கலாம் என்று கொரோனா தடுப்பூசியை உருவாக்கிய பைசர் நிறுவனம் தெரிவித்துள்ளது. 

The corona may last until 2024 said pfizer

ஒமைக்ரான் வைரஸ் பரவல் காரணமாக கொரோனா பெருந்தொற்று 2024 ஆம் ஆண்டு வரை நீடிக்கலாம் என்று கொரோனா தடுப்பூசியை உருவாக்கிய பைசர் நிறுவனம் தெரிவித்துள்ளது. தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டுள்ள புதிய வகை உருமாறிய கொரோனாவான ஒமைக்ரான் வைரஸ் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது. மிகவும் வேகமாக பரவும் தன்மை கொண்ட ஒமைக்ரான் வைரஸ் குறுகிய காலத்தில் பல்வேறு நாடுகளுக்கும் பரவி உள்ளது. குறிப்பாக இங்கிலாந்தில் பரவி உள்ள ஒமைக்ரான் வைரசால் அங்கு தினசரி பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 93 ஆயிரம் பேர் ஒமைக்ரான் வைரஸ் தொற்றுக்குள்ளாகி உள்ளனர். பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருவதை அடுத்து கொரோனா பெருந்தொற்று விரைவில் முடிவுக்கு வரும் என்று எதிர் பார்க்கப்பட்டது.

The corona may last until 2024 said pfizer

ஆனால் ஒமைக்ரான் வைரசுக்கு எதிராக தற்போது பயன்பாட்டில் உள்ள தடுப்பு மருந்துகள் குறைந்த அளவிலேயே செயல்திறன் மிக்கதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் மீண்டும் கொரோனா அலை ஏற்பட்டு விடுமோ என்ற அச்சம் நிலவி வருகிறது. ஓமைக்ரான் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் அனைத்து நாடுகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதுவரை உருமாறிய கொரோனா வைரஸ்களில் டெல்டா வகை வைரஸ் அதிக ஆபத்தானது என்று கூறப்பட்ட நிலையில் தற்போது அதை விட வீரியமானது இந்த ஓமைக்ரான் வகை வைரஸ் என்று கூறப்படுகிறது. இது 32 முறை உருமாற்றமடைந்து ஓமைக்ரானாக பரவி வருவதாக கூறப்படுகிறது. இதற்கிடையே இந்தியாவில் 11 மாநிலங்களில் ஒமைக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 101 பேர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் மஹாராஷ்டிராவில் 32 பேர், டில்லியில் 22 பேர், ராஜஸ்தானில் 17 பேர், கர்நாடகாவில் 8 பேர், தெலுங்கானாவில் 8 பேர், குஜராத்தில் 5 பேர், கேரளாவில் 5 பேர், ஆந்திரா - 1, சண்டிகர் - 1, தமிழகம் - 1, மேற்குவங்கம் – 1 என நாடு முழுவதும் இதுவரை 101 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் ஒமைக்ரான் வைரஸ் பரவல் காரணமாக கொரோனா பெருந்தொற்று 2024 ஆம் ஆண்டு வரை நீடிக்கலாம் என்று கொரோனா தடுப்பூசியை உருவாக்கிய நிறுவனங்களில் ஒன்றான பைசர் தெரிவித்துள்ளது.

The corona may last until 2024 said pfizer

இது குறித்து பைசர் நிறுவனத்தின் தலைமை அறிவியல் அதிகாரி மைக்கேல் டோல்ஸ்டன், அடுத்த ஆண்டு அல்லது இரண்டு ஆண்டுகளில் சில பிராந்தியங்களில் கொரோனா நோய் தொற்று நிலை தொடரும் என்று எதிர்பார்க்கிறோம். 2024 ஆம் ஆண்டில் கொரோனா பெருந்தொற்று உலகம் முழுவதும் பரவும் என்று கணித்திருக்கிறோம். இது எப்படி சரியாக நிகழும் என்பது நோயின் பரிமாணம், தடுப்பூசிகள் மற்றும் சிகிச்சைகள் எவ்வாறு திறம்பட பயன்படுத்தப்படுகிறது, தடுப்பூசி குறைவாக உள்ள இடங்களுக்கு சமமான தடுப்பூசி வினியோகம் ஆகியவற்றை பொறுத்து அமையும். புதிய வைரஸ் மாறுபாடுகள் கொரோனா பெருந்தொற்றை தொடர்ந்து நிலைக்க வைத்து பாதிப்பை ஏற்படுத்தலாம் என்று தெரிவித்தார். 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios