போதும்…! எல்லாரும் ஆபிசுக்கு புறப்பட்டு வாங்க… ஊழியர்களை அழைத்த பிரபல நிறுவனம்
பிரபல நிறுவனமான டிசிஎஸ் தமது ஊழியர்களை மீண்டும் அலுவலகத்தில் வந்து பணிகளை தொடருமாறு அழைப்பு விடுத்துள்ளது.
பிரபல நிறுவனமான டிசிஎஸ் தமது ஊழியர்களை மீண்டும் அலுவலகத்தில் வந்து பணிகளை தொடருமாறு அழைப்பு விடுத்துள்ளது.
கொரோனா தொற்று உலகத்தின் இயல்பு நிலையையே மாற்றி அமைத்துவிட்டது. கோடிக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு, பலி எண்ணிக்கையும் கட்டுக்கடங்காமல் போனது.
கிட்டத்தட்ட 200க்கும் மேலான நாடுகள் கொரோனா என்னும் சுழலில் சிக்கி தவித்தன. கொரோனா ஊரடங்கு காரணமாக பெரும்பாலான முன்னணி நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை வீடுகளில் இருந்தே பணியாற்றுமாறு தெரிவித்தது.
வொர்க் ப்ரம் ஹோம் என்ற இந்த நடைமுறை தொடக்கத்தில் வித்தியாசமான சூழலாக கருதப்பட்டாலும் பின்னாளில் அதுபற்றிய மீம்சும் களை கட்டின. இந் நிலையில் வொர்க் பிரம் ஹோம் என்ற நடைமுறைக்கு எண்ட் கார்டு போட்டுள்ளது பிரபல நிறுவனமான டிசிஎஸ்.
நவம்பர் 15ம் தேதி முதல் உலகில் உள்ள அனைத்து நாடுகளிலும் உள்ள டிசிஎஸ் நிறுவன ஊழியர்கள் அலுவலகத்துக்கு வரவேண்டும் என்றும் அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும் என்றும் டிசிஎஸ் நிறுவனம் ஊழியர்களை அறிவுறுத்தி இருக்கிறது.