பாதிப்பு குறைவு.. ஆனா பலி எண்ணிக்கை அதிகரிப்பு… கோவையிலும் மாறிய கொரோனா நிலவரம்
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைந்து இருந்தாலும், பலி எண்ணிக்கை உயர்ந்திருக்கிறது.
சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைந்து இருந்தாலும், பலி எண்ணிக்கை உயர்ந்திருக்கிறது.
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் நிகழ்ந்த கொரோனா பாதிப்புகளை சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டு உள்ளது. அதன் விவரம் வருமாறு:
தமிழகத்தில் புதியதாக 1289 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. இதன் மூலம் ஒட்டு மொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26,80,857 ஆக உயர்ந்துள்ளது.
சென்னையில் 164 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. கோவையில் நேற்று 128 என இருந்த கொரோனா தொற்றுகளின் எண்ணிக்கை இன்று சற்றே உயர்ந்து 137 ஆக பதிவாகி உள்ளது.
தமிழகம் முழுவதும் 18 பேர் பலியாகி உள்ளனர். ஒட்டு மொத்த பலி எண்ணிக்கை 35,814 ஆக இருக்கிறது. 1421 பேர் இன்று குணமாக டிஸ்சார்ஜ் ஆனவர்களின் ஒட்டு மொத்த எண்ணிக்கை 26,29,201 ஆக உள்ளது. இன்னமும் 15,842 பேர் கொரோனா சிகிக்சையில் இருக்கின்றனர் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.