Tamilnadu Corona : கிடுகிடுவென உயரும் கொரோனா… தமிழகத்தில் 9000-ஐ நெருங்கியது… சென்னையில் மட்டும் 5000!!
தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 8,981 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 8,981 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று ஒரு நாள் பாதிப்பு 6,983 ஆக இருந்த நிலையில் இன்றைய கொரோனா உறுதியானவர்களின் எண்ணிக்கை 1,998 அதிகரித்து 8,981 ஆக பதிவாகியுள்ளது. 1,36,620 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 8,981 ஆக உள்ளது. சென்னையில் மட்டும் 4,531 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று ஒரு நாள் பாதிப்பு 3,759 ஆக இருந்த நிலையில், இன்று மேலும் கொரோனா எண்ணிக்கை அதிகரித்துள்ளது. சென்னையில் தினசரி பாதிப்பு எண்ணிக்கையில் ஒரேநாளில் 700க்கும் மேல் கொரோனா அதிகரித்துள்ளது. ஒருநாள் கொரோனா பாதிப்பு 3,759 ஆக இருந்த நிலையில் 772 அதிகரித்து 4,531 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் 8,944 பேர், வெளி நாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வந்த 37 பேர் என 8,981 பேருக்கு இன்று கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவால் இன்று ஒரு நாள் மட்டும் 8 பேர் உயிரிழந்த நிலையில் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 36,833 ஆக உள்ளது. அரசு மருத்துவமனையில் 3 பேரும் தனியார் மருத்துவமனையில் 5 பேரும் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 30,817 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனா தொற்றிலிருந்து 984 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதன் மூலம் குணமடைந்தோர் எண்ணிக்கை 27,08,763 ஆக அதிகரித்துள்ளது. சென்னைக்கு அடுத்தபடியாக செங்கல்பட்டில் 816 ஆக இருந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு தற்போது 1,039 ஆக அதிகரித்துள்ளது. அதே போல் திருவள்ளூரில் 444 ஆக இருந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு தற்போது 514 ஆக அதிகரித்துள்ளது.
கோவையில் 309 ஆக இருந்த ஒரு நாள் கொரோனா பாதிப்பு 408 ஆக அதிகரித்துள்ளது. வேலூரில் 223 ஆக இருந்த கொரோனா பாதிப்பு தற்போது 189 ஆக அதிகரித்துள்ளது. காஞ்சிபுரத்தில் 185 ஆக இருந்த கொரோனா பாதிப்பு தற்போது 257 ஆக அதிகரித்துள்ளது. தூத்துக்குடியில் 132 ஆக இருந்த கொரோனா பாதிப்பு தற்போது 160 ஆக அதிகரித்துள்ளது. திருச்சியில் 123 ஆக இருந்த கொரோனா பாதிப்பு தற்போது 184 ஆக அதிகரித்துள்ளது. இதேபோல் திருப்பூர் 127, சேலம் 119, கன்னியாகுமரி 117, ராணிப்பேட்டை 113, நெல்லை 104 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் தமிழக மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா தொற்று பதிவாகியுள்ளது. சென்னை, செங்கல்பட்டு, கோவை ஆகிய மூன்று மாவட்டங்களில் அதிக அளவில் கொரோனா தினசரி பாதிப்பு உள்ளது.