Corona TN: 30 ஆயிரத்தை நெருங்கும் ஒருநாள் பாதிப்பு… தமிழகத்தில் 29,870 பேருக்கு கொரோனா… மக்கள் அதிர்ச்சி!!
தமிழகத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 30 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.
தமிழகத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 30 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 29,870 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று ஒரு நாள் பாதிப்பு 28,561 ஆக இருந்த நிலையில் இன்றைய கொரோனா உறுதியானவர்களின் எண்ணிக்கை 1,309 அதிகரித்து 29,870 ஆக பதிவாகியுள்ளது. 1,54,282 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 29,870 ஆக உள்ளது. ஜனவரி 1 ஆம் தேதி 1,489 ஆக இருந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு தற்போது 29,870 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் மட்டும் 7,038 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் ஏற்கனவே 7,520 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று மேலும் கொரோனா எண்ணிக்கை அதிகரித்து 7,038 ஆக குறைந்துள்ளது. ஜனவரி 1 ஆம் தேதி 682 ஆக இருந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு தற்போது 7,038 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் 29,848 பேர், வெளி நாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வந்த 22 பேர் என 28,870 பேருக்கு இன்று கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 33 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவால் இன்று ஒரு நாள் மட்டும் 33 பேர் உயிரிழந்த நிலையில் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 37,145 ஆக உள்ளது. அரசு மருத்துவமனையில் 12 பேரும் தனியார் மருத்துவமனையில் 21 பேரும் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 1,87,358 ஆக உயர்ந்துள்ளது. ஏற்கனவே 1,79,205ல் இருந்து 1,87,358 ஆக அதிகரித்துள்ளது. மேலும் கொரோனா தொற்றிலிருந்து மேலும் 21,684 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதன் மூலம் குணமடைந்தோர் எண்ணிக்கை 28,48,163 ஆக அதிகரித்துள்ளது. சென்னைக்கு அடுத்தபடியாக கோவையில் 3,390 ஆக இருந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு தற்போது 3,653 ஆக அதிகரித்துள்ளது. அதே போல் செங்கல்பட்டில் 2,196 ஆக இருந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு தற்போது 2,250 ஆக அதிகரித்துள்ளது. திருவள்ளூரில் 998 ஆக இருந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு தற்போது 1,016 ஆக அதிகரித்துள்ளது.
திருப்பூரில் 897 ஆக இருந்த கொரோனா பாதிப்பு தற்போது 958 ஆக அதிகரித்துள்ளது. ஈரோட்டில் 919 ஆக இருந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு தற்போது 973 ஆக அதிகரித்துள்ளது. கன்னியாகுமரியில் 1,148 ஆக இருந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு தற்போது 1,248 ஆக அதிகரித்துள்ளது. மதுரையில் 718 ஆக இருந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு தற்போது 903 ஆக அதிகரித்துள்ளது. தஞ்சையில் 544 ஆக ஒருநாள் கொரோனா பாதிப்பு தற்போது 684 ஆக அதிகரித்துள்ளது. நெல்லையில் 756 ஆக இருந்த ஒருநாள் பாதிப்பு தற்போது 754 ஆக குறைந்துள்ளது. சேலத்தில் 937 ஆக இருந்த ஒருநாள் பாதிப்பு தற்போது 1,009 ஆக அதிகரித்துள்ளது. காஞ்சிபுரத்தில் 738 ஆக இருந்த ஒருநாள் பாதிப்பு தற்போது 635 ஆக குறைந்துள்ளது. கிருஷ்ணகிரியில் 684 ஆக இருந்த ஒருநாள் பாதிப்பு தற்போது 748 ஆக அதிகரித்துள்ளது. இதேபோல் திருச்சி 632, கடலூர் 552, தி.மலை 571, விருதுநகர் 629, நாமக்கல் 559 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழக மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா தொற்று பதிவாகியுள்ளது.