Corona : தமிழகத்தில் 15,000ஐ கடந்தது தினசரி பாதிப்பு..சென்னையில் மட்டும் 6000க்கும் மேற்பட்டோருக்கு தொற்று!!
தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 15,379 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 15,379 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று ஒரு நாள் பாதிப்பு 13,990 ஆக இருந்த நிலையில் இன்றைய கொரோனா உறுதியானவர்களின் எண்ணிக்கை 1,380 அதிகரித்து 15,379 ஆக பதிவாகியுள்ளது. 1,35,672 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 15,379 ஆக உள்ளது. ஜனவரி 1 ஆம் தேதி 1,489 ஆக இருந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு தற்போது 15,379 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் மட்டும் 6,484 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஜனவரி 1 ஆம் தேதி 682 ஆக இருந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு தற்போது 6,484 ஆக அதிகரித்துள்ளது. நேற்று ஒரு நாள் பாதிப்பு 6,190 ஆக இருந்த நிலையில், இன்று மேலும் கொரோனா எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஒருநாள் கொரோனா பாதிப்பு 6,190 ஆக இருந்த நிலையில் 294 அதிகரித்து 6,484 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் 15,330 பேர், வெளி நாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வந்த 49 பேர் என 15,379 பேருக்கு இன்று கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 20 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவால் இன்று ஒரு நாள் மட்டும் 20 பேர் உயிரிழந்த நிலையில் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 36,886 ஆக உள்ளது. அரசு மருத்துவமனையில் 9 பேரும் தனியார் மருத்துவமனையில் 11 பேரும் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 75,083 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனா தொற்றிலிருந்து 3,043 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதன் மூலம் குணமடைந்தோர் எண்ணிக்கை 27,17,686 ஆக அதிகரித்துள்ளது.
சென்னைக்கு அடுத்தபடியாக செங்கல்பட்டில் 1,696 ஆக இருந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு தற்போது 1,665 ஆக குறைந்துள்ளது. அதே போல் திருவள்ளூரில் 1,054 ஆக இருந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு தற்போது 893 ஆக அதிகரித்துள்ளது. கோவையில் 602 ஆக இருந்த ஒரு நாள் கொரோனா பாதிப்பு 863 ஆக அதிகரித்துள்ளது. வேலூரில் 236 ஆக இருந்த கொரோனா பாதிப்பு தற்போது 270 ஆக குறைந்துள்ளது. மதுரையில் 330 ஆக இருந்த கொரோனா பாதிப்பு தற்போது 512 ஆக குறைந்துள்ளது. காஞ்சிபுரத்தில் 508 ஆக இருந்த கொரோனா பாதிப்பு தற்போது 580 ஆக அதிகரித்துள்ளது. இதேபோல் நெல்லை 479, திருப்பூர் 253, விருதுநகர் 146, தூத்துக்குடி 146, கன்னியாகுமரி 289, கடலூர் 128, நீலகிரி 121, சேலம் 256, ராணிப்பேட்டை 136 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் தமிழக மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா தொற்று பதிவாகியுள்ளது.