தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 10,978 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 10,978 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று ஒரு நாள் பாதிப்பு 8,981 ஆக இருந்த நிலையில் இன்றைய கொரோனா உறுதியானவர்களின் எண்ணிக்கை 1,997 அதிகரித்து 10,978 ஆக பதிவாகியுள்ளது. 1,39,253 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 10,978 ஆக உள்ளது. சென்னையில் மட்டும் 5,098 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று ஒரு நாள் பாதிப்பு 4,531 ஆக இருந்த நிலையில், இன்று மேலும் கொரோனா எண்ணிக்கை அதிகரித்துள்ளது. சென்னையில் தினசரி பாதிப்பு எண்ணிக்கையில் ஒரேநாளில் 500க்கும் மேல் கொரோனா அதிகரித்துள்ளது. ஒருநாள் கொரோனா பாதிப்பு 4,531 ஆக இருந்த நிலையில் 567 அதிகரித்து 5,098 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் 10,978 பேர், வெளி நாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வந்த 46 பேர் என 10,978 பேருக்கு இன்று கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவால் இன்று ஒரு நாள் மட்டும் 10 பேர் உயிரிழந்த நிலையில் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 36,843 ஆக உள்ளது. அரசு மருத்துவமனையில் 5 பேரும் தனியார் மருத்துவமனையில் 5 பேரும் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 40,260 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனா தொற்றிலிருந்து 1,525 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதன் மூலம் குணமடைந்தோர் எண்ணிக்கை 27,10,288 ஆக அதிகரித்துள்ளது. சென்னைக்கு அடுத்தபடியாக செங்கல்பட்டில் 1,039 ஆக இருந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு தற்போது 1,332 ஆக அதிகரித்துள்ளது. அதே போல் திருவள்ளூரில் 514 ஆக இருந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு தற்போது 591 ஆக அதிகரித்துள்ளது.

