தமிழகத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 300க்கும் கீழ் குறைந்துள்ளது. அந்த வகையில் தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 292 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 300க்கும் கீழ் குறைந்துள்ளது. அந்த வகையில் தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 292 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று ஒரு நாள் பாதிப்பு 320 ஆக இருந்த நிலையில் இன்றைய கொரோனா உறுதியானவர்களின் எண்ணிக்கை 292 ஆக குறைந்துள்ளது. 53,194 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 292 ஆக உள்ளது. சென்னையில் மட்டும் 83 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் ஏற்கனவே 89 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று கொரோனா எண்ணிக்கை 83 ஆக குறைந்துள்ளது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred


தமிழகத்தில் இன்று ஒருவர் கொரோனாவால் உயிரிழந்துள்ளார். கொரோனாவால் இன்று ஒருவர் உயிரிழந்துள்ளதை அடுத்து உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 38,010 ஆக உள்ளது. கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 4,437ல் இருந்து 3,950 ஆக குறைந்துள்ளது. கொரோனா தொற்றிலிருந்து மேலும் 778 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதன் மூலம் குணமடைந்தோர் எண்ணிக்கை 34,08,373ஆக உள்ளது. சென்னைக்கு அடுத்தபடியாக கோவையில் 45 ஆக இருந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு தற்போது 43 ஆக குறைந்துள்ளது.