தமிழகத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஆயிரத்துக்கும் கீழ் குறைந்துள்ளது. அந்த வகையில் தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 788 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஆயிரத்துக்கும் கீழ் குறைந்துள்ளது. அந்த வகையில் தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 788 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று ஒரு நாள் பாதிப்பு 949 ஆக இருந்த நிலையில் இன்றைய கொரோனா உறுதியானவர்களின் எண்ணிக்கை 788 ஆக குறைந்துள்ளது. 70,379 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 788 ஆக உள்ளது. சென்னையில் மட்டும் 191 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் ஏற்கனவே 223 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று கொரோனா எண்ணிக்கை 191 ஆக குறைந்துள்ளது.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் ஒருவர் உயிரிழந்துள்ளார். கொரோனாவால் இன்று ஒருவர் உயிரிழந்த நிலையில் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 37,981 ஆக உள்ளது. தமிழகத்தில் கொரோனா சிகிச்சையில் இருப்போர் 14,033 ஆக உள்ளது. கொரோனா தொற்றிலிருந்து மேலும் 2,692 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதன் மூலம் குணமடைந்தோர் எண்ணிக்கை 33,93,703 ஆக உள்ளது.

