TN Corona : தமிழகத்தில் 16,500க்கும் கீழ் குறைந்தது ஒருநாள் கொரோனா... 16,096 பேருக்கு தொற்று உறுதி!!
தமிழகத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 16 ஆயிரத்து 500க்கும் கீழ் குறைந்துள்ளது. அந்த வகையில் தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 16,096 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 16 ஆயிரத்து 500க்கும் கீழ் குறைந்துள்ளது. அந்த வகையில் தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 16,096 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று ஒரு நாள் பாதிப்பு 19,280 ஆக இருந்த நிலையில் இன்றைய கொரோனா உறுதியானவர்களின் எண்ணிக்கை 16,096 ஆக பதிவாகியுள்ளது. தமிழகத்தில் 16,093, வெளிநாட்டில் இருந்து வந்த 3 பேர் என 16,096 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 1,30,651 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 16,096 ஆக உள்ளது. ஜனவரி 1 ஆம் தேதி 1,489 ஆக இருந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு தற்போது 16,096 ஆக உள்ளது. சென்னையில் 2,400க்கும் கீழ் ஒருநாள் பாதிப்பு குறைந்துள்ளது. சென்னையில் மேலும் 2,348 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் ஏற்கனவே 2,897 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று கொரோனா எண்ணிக்கை 2,348 ஆக குறைந்துள்ளது. ஜனவரி 1 ஆம் தேதி 682 ஆக இருந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு தற்போது 2,348 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 35 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவால் இன்று ஒரு நாள் மட்டும் 35 பேர் உயிரிழந்த நிலையில் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 37,599 ஆக உள்ளது. அரசு மருத்துவமனையில் 21 பேரும் தனியார் மருத்துவமனையில் 14 பேரும் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா சிகிச்சையில் இருப்போர் 1,88,599 ஆக குறைந்துள்ளது. மேலும் கொரோனா தொற்றிலிருந்து மேலும் 25,592 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதன் மூலம் குணமடைந்தோர் எண்ணிக்கை 31,35,118 ஆக அதிகரித்துள்ளது.
சென்னைக்கு அடுத்தபடியாக கோவையில் ஒருநாள் கொரோனா பாதிப்பு தற்போது 1,897 ஆக உள்ளது. அதே போல் செங்கல்பட்டில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 1,308 ஆக உள்ளது. கன்னியாகுமரியில் ஒருநாள் கொரோனா பாதிப்பு தற்போது 658 ஆக உள்ளது. திருவள்ளூர் 556, திருப்பூர் 1,297, ஈரோடு 924, மதுரை 291, நெல்லை 336, சேலம் 851, கிருஷ்ணகிரி 489, தஞ்சை 394, நாமக்கல் 470, திருச்சி 389, காஞ்சிபுரம் 445, ராணிப்பேட்டை 228, கடலூர் 227, விழுப்புரம் 211, விருதுநகர் 160, தருமபுரி 210, தென்காசி 153, தூத்துக்குடி 156, திருப்பத்தூர் 173 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதேபோல் தமிழக மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா தொற்று பதிவாகியுள்ளது.