TN Corona : தமிழகத்தில் 23 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்தது தினசரி கொரோனா... 22,238 பேருக்கு தொற்று உறுதி!!
தமிழகத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 23 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்துள்ளது. அந்த வகையில் தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 22,238 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 23 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்துள்ளது. அந்த வகையில் தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 22,238 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று ஒரு நாள் பாதிப்பு 24,418 ஆக இருந்த நிலையில் இன்றைய கொரோனா உறுதியானவர்களின் எண்ணிக்கை 2,180 குறைந்து 22,238 ஆக பதிவாகியுள்ளது. தமிழகத்தில் 22,237, வெளிநாட்டில் இருந்து வந்த ஒருவர் என 22,238 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 1,36,952 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 22,238 ஆக உள்ளது. ஜனவரி 1 ஆம் தேதி 1,489 ஆக இருந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு தற்போது 22,238 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் மட்டும் 3,998 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் ஏற்கனவே 4,508 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று கொரோனா எண்ணிக்கை 3,998 ஆக குறைந்துள்ளது. ஜனவரி 1 ஆம் தேதி 682 ஆக இருந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு தற்போது 3,998 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 38 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவால் இன்று ஒரு நாள் மட்டும் 38 பேர் உயிரிழந்த நிலையில் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 37,544 ஆக உள்ளது. அரசு மருத்துவமனையில் 15 பேரும் தனியார் மருத்துவமனையில் 23 பேரும் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா சிகிச்சையில் இருப்போர் 2,03,926 ஆக குறைந்துள்ளது. மேலும் கொரோனா தொற்றிலிருந்து மேலும் 26,624 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதன் மூலம் குணமடைந்தோர் எண்ணிக்கை 30,84,470 ஆக அதிகரித்துள்ளது. சென்னைக்கு அடுத்தபடியாக கோவையில் 3,309 ஆக இருந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு தற்போது 2,865 ஆக குறைந்துள்ளது. அதே போல் செங்கல்பட்டில் 1,614 ஆக இருந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு தற்போது 1,534 ஆக குறைந்துள்ளது. கன்னியாகுமரியில் 866 ஆக இருந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு தற்போது 809 ஆக குறைந்துள்ளது.
திருவள்ளூரில் 640 ஆக இருந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு தற்போது 627 ஆக குறைந்துள்ளது. திருப்பூரில் 1,649 ஆக இருந்த கொரோனா பாதிப்பு தற்போது 1,497 ஆக குறைந்துள்ளது. ஈரோட்டில் 1,198 ஆக இருந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு தற்போது 1,127 ஆக குறைந்துள்ளது. மதுரையில் 483 ஆக இருந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு தற்போது 426 ஆக குறைந்துள்ளது. நெல்லையில் 436 ஆக இருந்த ஒருநாள் பாதிப்பு தற்போது 404 ஆக குறைந்துள்ளது. சேலத்தில் 1,264 ஆக இருந்த ஒருநாள் பாதிப்பு தற்போது 1,181 ஆக குறைந்துள்ளது. கிருஷ்ணகிரியில் 665 ஆக இருந்த ஒருநாள் பாதிப்பு தற்போது 612 ஆக குறைந்துள்ளது. தஞ்சையில் 625 ஆக ஒருநாள் கொரோனா பாதிப்பு தற்போது 592 ஆக குறைந்துள்ளது. நாமக்கல்லில் 601 ஆக இருந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு தற்போது 572 ஆக குறைந்துள்ளது. திருச்சியில் 574 ஆக இருந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு தற்போது 518 ஆக குறைந்துள்ளது. காஞ்சிபுரம் 494, ராணிப்பேட்டை 365, கடலூர் 329, விழுப்புரம் 326, விருதுநகர் 311, தருமபுரி 274, தென்காசி 251, தூத்துக்குடி 217, திருப்பத்தூர் 214 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதேபோல் தமிழக மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா தொற்று பதிவாகியுள்ளது.