TN Corona: தமிழகத்தில் குறையும் கொரோனா தொற்று… 4 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு பூஜ்யம்!!
தமிழகத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 400க்கும் கீழ் குறைந்துள்ளது. அந்த வகையில் தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 320 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 400க்கும் கீழ் குறைந்துள்ளது. அந்த வகையில் தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 320 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று ஒரு நாள் பாதிப்பு 348 ஆக இருந்த நிலையில் இன்றைய கொரோனா உறுதியானவர்களின் எண்ணிக்கை 320 ஆக குறைந்துள்ளது. 52,851 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 320 ஆக உள்ளது. சென்னையில் மட்டும் 89 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் ஏற்கனவே 92 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று கொரோனா எண்ணிக்கை 89 ஆக குறைந்துள்ளது.
தமிழகத்தில் இன்று 3 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளார். கொரோனாவால் இன்று 3 பேர் உயிரிழந்துள்ளதை அடுத்து உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 38,009 ஆக உள்ளது. கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 5,066ல் இருந்து 4,437 ஆக குறைந்துள்ளது. கொரோனா தொற்றிலிருந்து மேலும் 946 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதன் மூலம் குணமடைந்தோர் எண்ணிக்கை 34,07,595 ஆக உள்ளது. சென்னைக்கு அடுத்தபடியாக கோவையில் 51 ஆக இருந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு தற்போது 45 ஆக குறைந்துள்ளது.
அதே போல் செங்கல்பட்டில் 39 ஆக இருந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு தற்போது 36 ஆக குறைந்துள்ளது. அரியலூர் 0, செங்கல்பட்டு 36, சென்னை 89, கோயம்புத்தூர் 45, கடலூர் 5, தர்மபுரி 2, திண்டுக்கல் 3, ஈரோடு 9, கள்ளக்குறிச்சி 1, காஞ்சிபுரம் 9, கன்னியாகுமரி 7, கரூர் 3, கிருஷ்ணகிரி 6, மதுரை 3, மயிலாடுதுறை 0, நாகப்பட்டிணம் 1, நாமக்கல் 3, நீலகிரி 16, பெரம்பலூர் 1, புதுகோட்டை 1, ராமநாதபுரம் 1, ராணிப்பேட்டை 2, சேலம் 10, சிவகங்கை 6, தென்காசி 1, தஞ்சாவூர் 4, தேனி 0, திருப்பத்தூர் 0, திருவள்ளூர் 11, திருவண்ணாமலை 1, திருவாரூர் 2, தூத்துக்குடி 1, திருநெல்வேலி 6, திருப்பூர் 10, திருச்சி 11, வேலூர் 9, விழுப்புரம் 2, விருதுநகர் 3 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.