தமிழகத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 30 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்துள்ளது. அந்த வகையில் தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 29,976 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 30 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்துள்ளது. அந்த வகையில் தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 29,976 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று ஒரு நாள் பாதிப்பு 30,055 ஆக இருந்த நிலையில் இன்றைய கொரோனா உறுதியானவர்களின் எண்ணிக்கை 79 குறைந்து 29,976 ஆக பதிவாகியுள்ளது. 1,50,931 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 29,976 ஆக உள்ளது. ஜனவரி 1 ஆம் தேதி 1,489 ஆக இருந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு தற்போது 29,976 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் மட்டும் 5,973 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் ஏற்கனவே 6,241 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று கொரோனா எண்ணிக்கை 5,973 ஆக குறைந்துள்ளது. ஜனவரி 1 ஆம் தேதி 682 ஆக இருந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு தற்போது 5,973 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் 29,958 பேர், வெளி நாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வந்த 18 பேர் என 29,976 பேருக்கு இன்று கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 47 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவால் இன்று ஒரு நாள் மட்டும் 47 பேர் உயிரிழந்த நிலையில் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 37,359 ஆக உள்ளது. அரசு மருத்துவமனையில் 21 பேரும் தனியார் மருத்துவமனையில் 26 பேரும் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 2,13,692 ஆக அதிகரித்துள்ளது. ஏற்கனவே 2,11,270ல் இருந்து 2,13,692 ஆக அதிகரித்துள்ளது. மேலும் கொரோனா தொற்றிலிருந்து மேலும் 27,507 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதன் மூலம் குணமடைந்தோர் எண்ணிக்கை 29,73,185 ஆக அதிகரித்துள்ளது. சென்னைக்கு அடுத்தபடியாக கோவையில் 3,763 ஆக இருந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு தற்போது 3,740 ஆக குறைந்துள்ளது. அதே போல் செங்கல்பட்டில் 1,737 ஆக இருந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு தற்போது 1,883 ஆக அதிகரித்துள்ளது. கன்னியாகுமரியில் 1,217 ஆக இருந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு தற்போது 1,035 ஆக குறைந்துள்ளது.

