TN Corona : 10 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்தது தினசரி பாதிப்பு… ஒரே நாளில் 9,916 பேருக்கு தொற்று!!

தமிழகத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 10 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்துள்ளது. அந்த வகையில் தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 9,916 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

tamilnadu corona case count decreased below 10 thousand

தமிழகத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 10 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்துள்ளது. அந்த வகையில் தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 9,916 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று ஒரு நாள் பாதிப்பு 11,993 ஆக இருந்த நிலையில் இன்றைய கொரோனா உறுதியானவர்களின் எண்ணிக்கை 9,916 ஆக பதிவாகியுள்ளது. 1,27,356 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 9,916 ஆக உள்ளது. ஜனவரி 1 ஆம் தேதி 1,489 ஆக இருந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு தற்போது 9,916 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் மட்டும் 1,475 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் ஏற்கனவே 1,751 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று கொரோனா எண்ணிக்கை 1,475 ஆக குறைந்துள்ளது. ஜனவரி 1 ஆம் தேதி 682 ஆக இருந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு தற்போது 1,475 ஆக அதிகரித்துள்ளது.

tamilnadu corona case count decreasing day by day
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 30 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவால் இன்று ஒரு நாள் மட்டும் 30 பேர் உயிரிழந்த நிலையில் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 37,696 ஆக உள்ளது. அரசு மருத்துவமனையில் 19 பேரும் தனியார் மருத்துவமனையில் 11 பேரும் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா சிகிச்சையில் இருப்போர் 1,55,329 ஆக குறைந்துள்ளது. கொரோனா தொற்றிலிருந்து மேலும் 21,435 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதன் மூலம் குணமடைந்தோர் எண்ணிக்கை 31,04,213 ஆக அதிகரித்துள்ளது. சென்னைக்கு அடுத்தபடியாக கோவையில் 1,426 ஆக இருந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு தற்போது 1,224 ஆக குறைந்துள்ளது.

tamilnadu corona case count decreasing day by day
அதே போல் செங்கல்பட்டில் 1,097 ஆக இருந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு தற்போது 983 ஆக குறைந்துள்ளது. திருப்பூரில் 1,017 ஆக இருந்த கொரோனா பாதிப்பு தற்போது 857 ஆக குறைந்துள்ளது. ஈரோடு 576, சேலம் 435, கன்னியாகுமரி 356, திருவள்ளூர் 362, நாமக்கல் 263, கிருஷ்ணகிரி 221, காஞ்சிபுரம் 244, திருச்சி 266, தஞ்சை 241, நெல்லை 142, கடலூரில் 156, மதுரை 149, ராணிப்பேட்டை 135, விழுப்புரம் 122, தி.மலை 158, தருமபுரி 127, நீலகிரி 120, கரூர் 107, திண்டுக்கல் 98, திருப்பத்தூர் 89 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதேபோல் தமிழக மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா தொற்று பதிவாகியுள்ளது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios