Corona restrictions:இனி கொரோனா கட்டுப்பாடுகள் கிடையாது.. அனைத்து தளர்வுகளும் அறிவிப்பு.. மத்திய அரசு கடிதம்..

நாட்டில் நோய் தொற்று பாதிப்பு குறைந்து வருவதால் இனி கொரோனா கட்டுப்பாடுகள் கிடையாது என்றும்  தொடர்ந்து முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது.
 

No more corona restrictions- Central Govt Announcement

 

முதல் முறையாக பொதுமுடக்கம்:

இந்தியாவில் கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் 22 ஆம்  தேதி முதல் முறையாக கொரோனா தொற்று காரணமாக பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டது. தினசரி கூலி வேலை செய்வர்கள், புலம்பெயர் தொழிலாளிகள் உள்ளிட்ட பல்லாயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர். கல்வி நிறுவனங்கள், பொது போக்குவரத்து, சுற்றுலா தளங்கள், வணிக வளாகங்கள், தியேட்டர்கள், கடைகள் உள்ளிட்ட அனைத்திற்கும் தடை விதிக்கப்பட்டிருந்தது. அத்தியாவசிய பணிகளுக்கு மட்டும் கட்டுப்பாடுகளுடன் அனுமதி வழங்கப்பட்டிருந்தது. 

No more corona restrictions- Central Govt Announcement

இந்நிலையில், கொரோனாவின் முதல் அலையில் தொடர்ந்து 8 மாதங்கள் நீடித்த பொதுமுடக்கம் பின்பு படிப்படியாக விலக்கிக் கொள்ளப்பட்டது. அதனைத் தொடர்ந்து நாட்டில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் ஏற்பட்டது. முதல் அலையை விட இது பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. கொரோனாவால் பாதித்த நபர்களுக்கு மூச்சு திணறல் உள்ளிட்ட தீவிர பாதிப்புகள் ஏற்பட்டது. நாடு முழுவதும் கொரோனா நோயாளிகளுக்கு தேவையான ஆக்ஸிஜன் இல்லாமல் தட்டுப்பாடு ஏற்பட்டது. கொரோனா பாதிப்பால உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை பன்மடங்கு உயர்ந்தது. கொரோனா நோயால் பலியானவர்களின் உடலை புதைக்க கூட இடம் இல்லாமல் சுடுகாடுகள் திணறின. அந்த அளவிற்கு, கொரோனா இரண்டாவது அலை பெரும் உயிர் சேதங்களை ஏற்படுத்தியது.  

கொரோனா அலையின் தாக்கம்:

பின்னர் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்திற்கு பிறகு இரண்டாம் அலையின் கொரோனா பாதிப்பு மெல்ல மெல்ல குறைய தொடங்கியது. இதனால் நாடில் அறிவிக்கப்பட்ட பொதுமுடக்க கட்டுப்பாடுகள் விலக்கிக் கொள்ளப்பட்டன. அதன் பின்னர் கடந்த ஜனவரி மாதம் இந்தியாவில் மூன்றாவது அலை கரோனா பரவல் ஏற்பட்டது. கொரோனா தடுப்பூசி திட்டம் விரிவுப்படுத்தப்பட்டு நாட்டில் பெரும்பாலான நபர்களுக்கு செலுத்தப்பட்டதன் விளைவாக, இந்த அலையில் குறைந்த அளிவிலான பாதிப்புகளே ஏற்பட்டன. மேலும் ஜனவரி இறுதியில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை படிப்படியாக  குறைய தொடங்கி, பிப்ரவரி மாதம் முடிவடைந்து விட்டதாக மத்திய அரசு தெரிவித்தது.

No more corona restrictions- Central Govt Announcement

இருப்பினும் நாட்டில் கொரோனா ஊடரங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டாலும், சில  கட்டுப்பாடுகள் நடைமுறையில் இருந்து வந்தன. இந்த நிலையில், நாடு முழுவதும் கரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை குறைந்து வருவதைத் தொடர்ந்து, கோவிட் 19 கட்டுப்பாடு நடவடிக்கைகளுக்காக அமல்படுத்தபட்ட பேரிடர் மேலாண்மை சட்டம் 2005-ன் விதிகளை ரத்து செய்ய உள்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது. இருந்த போதிலும் முகக்கவசம் அணிய, தனிமனித இடைவெளியை தொடர்ந்து கடைபிடிக்க மக்கள் வலியுறுத்தப்பட்டுள்ளனர்.

இனி கொரோனா கட்டுப்பாடுகள் கிடையாது:

இதுகுறித்து மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா, அனைத்து மாநிலத் தலைமைச் செயலாளர்களுக்கும் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். இந்த கடிதத்தில், "மத்திய அரசு தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் வழிகாட்டுதலின் படி பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், கொரோனா பெருந்தொற்றைக் கட்டுப்படுத்த வழிகாட்டு நெறிமுறை உத்தரவுகளை வெளியிட்டது.அதன்படி, பிப்ரவரி 25ம் தேதிக்கு முன்பாக பிறப்பிக்கப்பட்ட கொரோனா கட்டுப்பாடு உத்தரவுகள் மார்ச் மாதம் 31ம் தேதியுடன் நிறைவடைகிறது. அதன் பின்னர் உள்துறை அமைச்சகம் வேறு எந்த புதிய உத்தரவையும் இதுவரை பிறப்பிக்கவில்லை. இருப்பினும் முகக்கவசம் அணிதல் மற்றும் சமூக இடைவெளியை மக்கள் தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

No more corona restrictions- Central Govt Announcement

மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் தொடர்ந்து நிலைமையினைக் கண்காணிக்க வேண்டும். எந்த ஒரு பகுதியிலாவது நோற்தொற்று விகிதம் அதிகரித்தால், மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவுறுத்தலின் படி உடனடி மற்றும் தேவையான நடவடிக்கையில் ஈடுபட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் மொத்தம் 23,972 பேர் மட்டுமே தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா தொற்று பரவல் விகிதம் 0.28 % ஆக குறைந்துள்ளது. இதுவரை நாட்டில் 181.56 கோடி டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios