தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 30 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று 24 பேருக்கு கொரோனா தொற்று இருந்த நிலையில் இன்று பாதிப்பு 30 ஆக அதிகரித்துள்ளது. 

தமிழகத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வந்தது. இதனிடையே ஜூன் மாதத்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் என்றும், 4வது அலை உருவாக வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த 24 மணிநேரத்தில் பதிவான கொரோனா பாதிப்பு குறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 30 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று 24 பேருக்கு கொரோனா தொற்று இருந்த நிலையில் இன்று பாதிப்பு 30 ஆக அதிகரித்துள்ளது. 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred


சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று 11 பேருக்கு கொரோனா பாதிப்பு இருந்த நிலையில் இன்று ஒருநாள் பாதிப்பு 12 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் கடந்த 24 மணி நேரத்தில் ஒருவர் கூட உயிரிழக்கவில்லை. இதை அடுத்து கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 38,025 ஆகவே உள்ளது. கொரோனாவால் 15ம் தேதி ஒருவர் உயிரிழந்ததை அடுத்து பலி எண்ணிக்கை 38,025 ஆக உள்ளது. கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 258 ஆக உள்ளது. கொரோனா தொற்றிலிருந்து மேலும் 28 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதன் மூலம் குணமடைந்தோர் எண்ணிக்கை 34,14,702 ஆக உள்ளது.