NeoCov Virus: 2012 ஆம் கண்டுபிடிக்கப்பட்ட வைரஸ் உடன் தொடர்புடைய ’நியோகோவ்’வைரஸ்.. ஆய்வில் அதிர்ச்சி..
தென் ஆப்பிரிக்காவில் வெளவாலில் கண்டறியப்பட்ட நியோகோவ் மாறுபாடு, சாரஸ்- கோவ் 2 வைரஸ் ஏற்படுத்தும் அறிகுறிகளையும் விளைவுகளையும் கொண்ட மெர்ஸ் காய்ச்சலை போலவே உள்ளது என்று சீனா விஞ்ஞானிகள் கண்டிப்பிடித்துள்ளதாக ரஷ்யா செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வந்தாலும் முந்தைய அலையை காட்டிலும் தீவிரத்தன்மை குறைவாகவே உள்ளது. கொரோனா தொற்று பாதித்த நபர்கள் மருத்துவமனைகளில் சேர்த்து சிகிச்சை பெறும் நிலையும் தற்போது குறைந்துள்ளது. இந்நிலையில் புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள நியோகோவ் வைரஸ் உலக மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வைரஸும் தென் ஆப்பிரிக்காவில் கண்டுபிடிப்பட்டுள்ளது. மிகவும் அபாயகரமான வைரஸ் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இந்த புதிய வைரஸ் அதிவேகமாக பரவும் தன்மை கொண்டதாகவும் அதிகளவில் இறப்பை ஏற்படுத்தும் என்றும் சீனாவில் உள்ள வூஹான் ஆய்வகத்தின் விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
இதுக்குறித்து ரஷ்ய செய்தி நிறுவனமாக ஸ்புட்னிக் வெளியிட்ட செய்தியில், கடந்த 2012- 2015 காலகட்டத்தில் மத்திய கிழக்கு நாடுகளில் கண்டறியப்பட்ட மெர்ஸ்-கோவ் என்ற வைரஸுடன் இந்த நியோகோவுக்கு தொடர்பு இருக்கிறது என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் புதிய வைரஸ் நியோகோவ் குறித்து டிஏஎஸ்எஸ் என்ற ரஷ்ய நிறுவனம் வெளியிட்ட செய்தியில், தென் ஆப்பிரிக்காவில் வெளவாலில் கண்டறியப்பட்ட நியோகோவ் மாறுபாடு, சாரஸ்- கோவ் 2 வைரஸ் ஏற்படுத்தும் அறிகுறிகளையும் விளைவுகளையும் கொண்ட மெர்ஸ் காய்ச்சலை போலவே உள்ளது என சீனாவில் உள்ள விஞ்ஞானிகள் கண்டிப்பிடித்துள்ளனர் என்று குறிப்பிட்டுள்ளது.
மேலும் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள நியோகோவ் வைரஸ் அதிக இறப்புகளை ஏற்படுத்தும் என்றும் இதனால் பாதிக்கப்படும் மூன்றில் இருவர் இறக்கின்றனர் என்றும் விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். மேலும் இதுக்குறித்து ரஷிய கிருமியல் மற்றும் உயிரி தொழில்நுட்பவியல் ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சீன ஆராய்ச்சியாளர்கள்,நியோகோவ் வைரஸ் குறித்து தரவுகள் சேகரித்து வைத்திருப்பதை குறித்து நம் ஆய்வு மையம் அறிந்திருக்கிறது. இந்த நேரத்தில் நம்முடைய பிரச்சனை என்பது மனிதர்களிடையே தீவிரமாக பரவும் திறன் கொண்ட புதிய கொரோனா வைரஸ் அல்ல எனக் கூறியுள்ளனர்.
ஒமைக்ரான் வைரஸும் முதல் முறையாக தென் ஆப்பிரிக்காவில் தான் கண்டுபிடிக்கப்பட்டது. தொடக்கத்தில், ஒமைக்ரானை கவலை அளிக்கும் வைரஸாக உலக சுகாதார அமைப்பு பட்டியலிட்டாலும், பின்னர் அது வேகமாக பரவுகிறதே தவிர மருத்துவமனை சிகிச்சை தேவைப்படும் அளவிற்கு பாதிப்புகளை ஏற்படுத்தவில்லை என விஞ்ஞானிகள் தகவல் வெளியிட்டுள்ளனர். இதனிடையே தடுப்பூசி செலுத்திக்கொள்வோரின் விகிதம் அதிகரித்ததன் விளைவாகவே ஒமைக்ரான் குறைவான இறப்பு விகிதத்தையும் மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெறுவதற்கான தேவையையும் குறைந்தது என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்தது.