இந்தியாவில் முதல் ஒமைக்ரான் வகை தொற்று… ஐதராபாத்தில் ஒருவருக்கு இருப்பது கண்டுப்பிடிப்பு!!
இந்தியாவின் முதல் ஒமைக்ரான் வகை தொற்று தெலுங்கானாவின் ஹைதராபாத்தில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவின் முதல் ஒமைக்ரான் வகை தொற்று தெலுங்கானாவின் ஹைதராபாத்தில் உறுதி செய்யப்பட்டுள்ளது. மரபணு கண்காணிப்பு திட்டத்தின் மூலம் கொரோனா வைரஸின் BA.4 வகை கண்டறியப்பட்டது. இந்தியாவில் முதன்முறையாக ஒமைக்ரான் பிஏ.4 வகை கொரோனா பாதிப்பு ஐதராபாத்தில் ஒருவருக்கு உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதுபற்றி இந்திய சார்ஸ்-கோவி-2 மரபியல் கூட்டமைப்பு (INSACOG) உறுதி செய்து வெளியிட்டுள்ள செய்தியில், தென்ஆப்பிரிக்காவில் இருந்து ஐதராபாத்துக்கு வந்த நபர் ஒருவருக்கு இந்த பிஏ.4 வகை கொரோனாவானது உறுதி செய்யப்பட்டு உள்ளது. அவருக்கு அறிகுறிகள் இல்லை. அவரிடம் இருந்து கடந்த 9ந்தேதி மாதிரிகள் எடுக்கப்பட்டு உள்ளன.
இதனை தொடர்ந்து, அவருடன் தொடர்பில் இருந்த மற்றவர்களை கண்டறியும் பணி முன்பே தொடங்கி விட்டது என தெரிவித்து உள்ளது. இந்த புதிய வகை கொரோனாவை அடையாளம் காணும் பணியும் மரபணு ஆய்வகங்களில் நடந்து வருகின்றன. இதுபற்றி (INSACOG) அமைப்பு வருகிற திங்கட்கிழமை மருத்துவ அறிக்கை ஒன்றை வெளியிடும்.
தென்ஆப்பிரிக்காவில் ஏற்பட்ட 5வது கொரோனா அலைக்கு ஒமைக்ரானின் இந்த பிஏ.4 மற்றும் பிஏ.5 வகையே காரணம் என அறியப்பட்டது. சமீபத்தில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளிலும் இந்த வகை கொரோனா பாதிப்பு பதிவாகி உள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,259 பேருக்கு கொரோனா தொற்றுகள் பதிவாகியுள்ளன. மேலும் இந்த தொற்றுக்கு 20 பேர் உயிரிழந்துள்ளனர். மத்திய சுகாதார அமைச்சகத்தின் தரவுகளின்படி, நாட்டில் கொரோனா வைரஸ் வழக்குகள் 4,31,31,822 ஆகவும், இறப்பு எண்ணிக்கை 5,24,323 ஆகவும் உயர்ந்துள்ளது.