Asianet News TamilAsianet News Tamil

ஒரே வாரத்தில் 3-வது முறை - இந்தியாவின் தினசரி கொரோனா பாதிப்பு 3 ஆயிரத்தை கடந்தது

இந்தியாவில் 18 ஆயிரத்து 319 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. இதன் மூலம் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை தற்போது 883 அதிகரித்து உள்ளது.

 

India new Covid cases top 3,500 Delhi logs 1607 cases Today Covid updates
Author
India, First Published Apr 30, 2022, 11:37 AM IST

இந்தியாவில் தினசரி கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை இந்த வாரத்தில் மூன்றாவது முறையாக 3 ஆயிரத்தை கடந்து இருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 3 ஆயிரத்து 688 ஆகும்.

புதிய தொற்று:

சமீபத்தில் வெளியிடப்பட்ட மத்திய சுகாதாரத் துறை அமைச்சக அறிக்கையின் படி இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று மூலம் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை  5 லட்சத்து 23 ஆயிரத்து 803 ஆக அதிகரித்து உள்ளது. கடந்த வாரத்தில் மட்டும் இந்தியாவில் 18 ஆயிரத்து 319 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. இதன் மூலம் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை தற்போது 883 அதிகரித்து உள்ளது.

தலைநகர் டெல்லியில் நேற்று (ஏப்ரல் 29) மட்டும் 1,607 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதேடு இரண்டு பேர் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு உயிரிழந்தனர். டெல்லியில் புதிய தொற்றாளர்கள் எண்ணிக்கை 5.28 சதவீதமாக உள்ளது. டெல்லியை தொடர்ந்து மகாராஷ்டிரா மாநிலத்தில் 148 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. மேற்கு வங்கத்தில் 52 பேருக்கும், தெலுங்கானாவில் 32 பேருக்கும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.

தடுப்பூசி:

இந்தியாவில் இதுவரை 188 கோடியே 87 லட்சம் பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டு இருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 20 லட்சத்து 30 ஆயிரத்து 807 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. இவற்றில் 2 லட்சத்து 20 ஆயிரம் தடுப்பூசிகள் பூஸ்டர் டோஸ் ஆகும். 

நேற்று மட்டும் நாடு முழுக்க 4 லட்சத்து 96 ஆயிரத்து 640 பேருக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை நடத்தப்பட்டு உள்ளது. இதன் மூலம் மொத்த பரிசோதனை எண்ணிக்கை 83 கோடியே 74 லட்சமாக அதிகரித்து இருக்கிறது.

Follow Us:
Download App:
  • android
  • ios