India corona: குறைந்த உயிரிழப்பு..அதிகரித்த குணமடைந்தோர் விகிதம்..ஒரே நாளில் 1.50 லட்சம் பேர் டிஸ்சார்ஜ்..
இன்று ஒரே நாளில் 14,91,678 கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டதில் அதில் 58 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 48 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
இன்று ஒரே நாளில் 14,91,678 கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டதில் அதில் 58 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 48 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
கொரோனாவிலிருந்து மீள்வோர் எண்ணிக்கை 1.50 லட்சத்தையொட்டி பதிவாகியுள்ளது. அந்தவகையில், கடந்த 24 மணி நேரத்தில் 1,50,407 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர். இதன்மூலம் இதுவரை கொரோனாவிலிருந்து மீண்டவர்களின் மொத்த எண்ணிக்கை இந்தியாவில் 4,13,31,158 என்றாகியுள்ளது. மேலும் தற்போது சிகிச்சையிலிருப்போர் எண்ணிக்கை 6,97,802 என குறைந்துள்ளது. இது நேற்றைவிட 92,987 குறைவாகும்.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 58,077 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. முன்னதாக நேற்றைய தினம் 67,084 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டிருப்பதாக சுகாதாரத்துறை தெரிவித்திருந்த நிலையில், பாதிப்பு இன்று சற்று குறைந்துள்ளது.இதனால் இந்தியாவில் தினசரி கொரோனா உறுதியாவோரின் எண்ணிக்கை விகிதம், 3.89% என்றாகியுள்ளது. சிகிச்சையிலிருப்போர் விகிதம், 1.64% என்றுள்ளது.
கொரோனா உயிரிழப்பை பொறுத்தவரை, கடந்த 24 மணி நேரத்தில் 657 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று 1,241 பேர் உயிரிழந்த நிலையில் இன்று அது சரிபாதியாக குறைந்துள்ளது. இதுவரை இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 5,07,177 என்று உயர்ந்துள்ளது. கொரோனா உறுதிசெய்யப்படுவோர் விகிதம் லட்சங்களிலிருந்து ஆயிரமாக குறைந்திருப்பதை போலவே, இறப்பும் சரிபாதியாக குறைந்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 48,18,867 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதன்மூலம் இதுவரை இந்தியாவில் 171.79 கோடி தடுப்பூசி டோஸ்கள் போடப்பட்டுள்ளன. அந்தவகையில் இதுவரை இந்தியாவில் 1,71,79,51,432 தடுப்பூசி டோஸ்கள் போடப்பட்டுள்ளன.
இது போல் தமிழகத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு கடந்த 24 மணி நேரத்தில் 3,592ஆக குறைந்துள்ளதாக மருத்துவத்துறை தெரிவித்திருக்கிறது.தமிழகத்தில் 1,10,346 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டதில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 3,592ஆக உள்ளது. சென்னையில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 663ஆக குறைந்துள்ளது. தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 25 பேர் உயிரிழந்துள்ளனர். தனியார் மருத்துவமனைகளில் 9 பேரும், அரசு மருத்துவமனைகளில் 16 பேரும் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 37,862ஆக உள்ளது