India corona: குறையும் கொரோனா..இன்று ஒரே நாளில் 1.27 லட்சம் பேர் பாதிப்பு..1059 பேர் பலி..
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1.27 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று ஒரே நாளில் 1059 பேர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த ஜனவரி மாதம் முதல், 3-வது அலையின் காரணமாக இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 3 லட்சத்தை தாண்டியது. இந்நிலையில், தற்போது கடந்த சில நாட்களாக தினசரி கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தினசரி கொரோனா பாதிப்பு குறித்த இன்றைய புள்ளிவிவரங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,27,952 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று 1,49,394 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில் இன்று 1,27,952 ஆக குறைந்துள்ளது.
இந்தியாவில் கொரோனா மொத்த பாதிப்பு 4,19,52,712 லிருந்து 4,20,80, 664 ஆக உயர்ந்துள்ளது. நாட்டில் கொரோனா பரவல் மற்றும் பாதிப்பு விகிதம் 7.98% ஆக குறைந்துள்ளது. வாராந்திர கொரோனா பரவல் மற்றும் பாதிப்பு விகிதம் 11.21% ஆகவும் உள்ளது. கொரோனாவில் இருந்து குணமடைவோர் விகிதம் 95.64 % ஆக உள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 1,059 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இதுவரை நாடுமுழுவதும் கொரோனா தொற்றிற்கு 5,01,114 பேர் பலியாகியுள்ளனர். நேற்று 1,072 பேர் கொரோனாவால் உயிரிழந்த நிலையில், இன்று 1,059 ஆக குறைந்துள்ளது.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 2,30,814 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் கொரோனாவிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யபட்டோர் எண்ணிக்கை 4,00,17,088 பேரிலிருந்து 4,02,47,902 ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொற்று பாதித்து 13,31,648 பேர் சிகிச்சையில் உள்ளனர். இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 47,53,081 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதுவரையில் 168.98 கோடி டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.