India corona:உயர்ந்த கொரோனா.. பாதிப்பு விகிதம் 10.99% ஆக அதிகரிப்பு..ஒரே நாளில் 1,008 பேர் பலி
நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 1.72 லட்சம் பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இன்று ஒரே நாளில் 1008 பேர் உயிரிழந்துள்ளனர்.
நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 1.72 லட்சம் பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இன்று ஒரே நாளில் 1008 பேர் உயிரிழந்துள்ளனர்.முன்னதாக நேற்றைய தினம் 1,61,386 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டிருப்பதாக சுகாதாரத்துறை தெரிவித்திருந்த நிலையில், பாதிப்பு இன்று சற்று அதிகரித்திருக்கிறது. கடந்த சில தினங்களாகவே தினசரி கொரோனா தொற்றாளர்கள் இந்தியாவில் குறைந்துவரும் நிலையில், இன்று பாதிப்பு சற்று அதிகரித்துள்ளது. நேற்றை விட இன்று 6.8% அதிகரித்திருக்கிறது.
நாட்டில் கொரோனா பாதிப்பு விவரங்கள் குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள தகவலின் படி, நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 1,72,433 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் மொத்தமாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4,18,03,318 ஆக அதிகரித்துள்ளது. இன்று ஒரே நாளில் 1,008 பேர் பலியாகியுள்ளனர். இதனால் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4,98,983 ஆக அதிகரித்துள்ளது.இறப்பு விகிதம் 1.19% என்றுள்ளது.
மேலும் கொரோனாவிலிருந்து மீள்வோர் எண்ணிக்கை உயர்ந்தும் வருகிறது. புதிதாக2,59,107 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் இதுவரை கொரோனாவாலிருந்து டிஸ்சார்ஜ் செய்யவர்களின் மொத்த எண்ணிக்கை 3,97,70,414 ஆக அதிகரித்துள்ளது. மேலும் தற்போது சிகிச்சையிலிருப்போர் எண்ணிக்கை 15,33,921 என குறைந்துள்ளது. இது நேற்று 16,21,603 என்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் குணமடைவோர் விகிதம் 95.14% என்றும், சிகிச்சையிலிருப்போர் விகிதம் 3.67% என்றும் உள்ளது. கொரோனாவில் பாதிக்கபடுவோர் விகிதம் 10.99 சதவீதமாக உள்ளது.நேற்றைய தினம் 9.26% என்றிருந்தது.நாடு முழுவதும் இதுவரை 167.87 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.