India corona:குறையும் கொரோனா..10% கீழ் குறைந்த கொரோனா பாதிப்பு.. ஆறுதல் செய்தி சொன்ன மருத்துவர்கள்..
இன்று ஒரே நாளில் நாட்டில் 1,61,386 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. தினசரி பாசிடிவிட்டி விகிதம் 10%க்கும் கீழ் குறைந்து 9.26 சதவீதம் என்றளவில் உள்ளது.
இந்தியாவில் ஒமைக்ரானால் மூன்றாவது அலை ஏற்பட்டுள்ள நிலையில் அது தற்போது மெல்ல மங்குகிறதா என்ற பேச்சுக்களும் எழத் தொடங்கியுள்ளன.கடந்த 24 மணி நேர நிலவரம் தொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி ,கடந்த 24 மணி நேரத்தில் 1,61,386 பேர் கொரோனா தொற்றிற்கு பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,16,30,885 ஆக அதிகரித்துள்ளது. இன்று ஒரே நாளில் 2,81,109 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர்.
இதனால் இவரை நோய்தொற்று பாதிப்பில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,95,11,307 ஆக உள்ளது. இதுவரை நாடு முழுவதும் கொரோனா சிகிச்சையில் உள்ளோரின் எண்ணிக்கை 16,21,603 ஆக இருக்கிறது. தினசரி பாசிடிவிட்டி விகிதம் 9.26% என்றளவில் உள்ளது. இன்று ஒரே நாளில் 1,733 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் கொரோனா மொத்த உயிரிழப்பு 4,97,975 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை தடுப்பூசி செலுத்திக் கொண்டோரின் எண்ணிக்கை 167.29 கோடி.
வாராந்திர பாசிடிவிட்டி விகிதம் 14.15% ஆக உள்ளது. அன்றாட பலி எண்ணிக்கை 1733 என்று அச்சுறுத்தும் வகையில் உள்ள நிலையில், கேரளா தனது பழைய கொரோனா பலி கணக்கை நேற்று புதிதாக சேர்த்துக் கொடுத்ததால் இறப்பு எண்ணிக்கை அதிகமாக உள்ளதாக சுகாதாரத் துறை விளக்கியுள்ளது.நாட்டில் கொரோனா தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது. அன்றாட பாசிடிவிட்டி விகிதம் 10%க்கும் கீழ் குறைந்து 9.26 சதவீதம் என்றளவில் உள்ளது. அன்றாட பாசிடிவிட்டி விகிதம் அதாவது நூறு பேரில் எத்தனைப் பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது என்ற விகிதம் 10%க்கும் கீழ் குறைந்துள்ளது ஆறுதல் அளிப்பதாக மருத்துவ, சுகாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்,
நாட்டில் கடந்த ஜனவரி மாதம் 3ஆம் தேதி முதல் 15 வயதிலிருந்து 18 வயதுடையோருக்கு தடுப்பூசி வழங்கப்பட்டு வரும் நிலையில், இதுவரை 4,71,44,423 பேருக்கு முதல் தவணை தடுப்பூசியும் 10,81,838 பேருக்கு இரண்டாவது தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து மகாராஷ்டிரா மாநிலத்தில் தான் அன்றாட பாதிப்பு அதிகமாக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அங்கு 14,372 பேருக்கு கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.