இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,545 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 

இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட தகவலின் படி, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,545 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் நாட்டில் கொரோனா தொற்று பாதிப்பினால் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4,30,94,936 ஆக உயர்ந்துள்ளது. நேற்று 3,275 பேருக்கு பாதிப்பு உறுதியான நிலையில் இன்று சற்று அதிகரித்து 3,545 ஆக பதிவாகியுள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

இன்று ஒரே நாளில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து 3,549 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மீண்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4,25,51,248 ஆக உயர்ந்துள்ளது. நாட்டில் குணமடைந்தோர் விகிதம் 98.74% ஆக உள்ளது. தற்போது கொரோனா பாதிப்பினால் 19,688 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுவோர் விகிதம் 0.05 % ஆக உள்ளது.

தினசரி தொற்று பரவல் விகிதம் 0.77 % ஆகவும் வாராந்திர தொற்று பரவல் விகிதம் 0.78 % ஆகவும் அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 27 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் நாட்டில் இதுவரை கொரோனா பாதிப்பினால் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 5,24,002 ஆக உள்ளது. இந்தியாவில் இதுவரை 189.81 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.