இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,451 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,451 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட தகவலின் படி, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,451 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் நாட்டில் கொரோனா தொற்று பாதிப்பினால் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4,31,02,192 ஆக உயர்ந்துள்ளது. நேற்று 3,805 பேருக்கு பாதிப்பு உறுதியான நிலையில் இன்று சற்று அதிகரித்து 3,451 ஆக பதிவாகியுள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

இன்று ஒரே நாளில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து 3,079 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மீண்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4,25,57,495 ஆக உயர்ந்துள்ளது. தற்போது கொரோனா பாதிப்பினால் 20,365 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 40 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் நாட்டில் இதுவரை கொரோனா பாதிப்பினால் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 5,24,064 ஆக உள்ளது. இந்தியாவில் இதுவரை 190.20 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 17,39,403 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

மேலும் படிக்க: அதிகரிக்கும் கொரோனா உயிரிழப்புகள்.. இந்தியாவை மீண்டும் அச்சுறுத்தும் கொரோனா.. அச்சச்சோ ?