India corona : கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 20,279 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் இன்று ஒரே நாளில் புதிதாக 36 பேர் உயிரிழந்துள்ளனர். 

இதுக்குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின் படி, கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 20,279 பேருக்கு கொரோனா தொற்று பதிவாகியுள்ளது. நேற்று முன்தினம் 21,880 ஆகவும் நேற்று 21,411 ஆக இருந்த கொரோனா பாதிப்பு இன்று 20,279 ஆக குறைந்ததுள்ளது. நாடு முழுவதும் இதுவரை இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கபட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4,38,88,755 ஆக அதிகரித்துள்ளது. 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

மேலும் படிக்க:சற்று குறைந்த கொரோனா.. இன்று ஒரே நாளில் 21,411 பேருக்கு தொற்று.. 67 பேர் பலி

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றிலிருந்து 18,143 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் இதுவரை கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 4,32,10,522 ஆக உள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இருப்போர் எண்ணிக்கை1,52,200 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 49 பேர் உயிரிழந்துள்ளனர். 

மேலும் படிக்க:தமிழகத்தில் இன்றைய கொரோனா நிலவரம்… 2,033 பேருக்கு தொற்று உறுதி!!

நாட்டில் இதுவரை கொரோனாவிற்கு பலியானவர்களின் எண்ணிக்கை 5,26,046 ஆக உயர்ந்துள்ளது. நாட்டில் கொரோனா உயிரிழப்பின் விகிதம் 1.20 % ஆக உள்ளது. அதே போல் சிகிச்சை பெறுவோரின் விகிதம் 0.34 % ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் விகிதம் 98.46 % ஆக குறைந்துள்ளது. இந்தியாவில் இதுவரை 201.68 கோடிக்கு அதிகமான தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. நேற்று ஒரே நாளில் 27,78,013 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.