அச்சுறுத்தும் கொரோனா.. இன்று ஒரே நாளில் 51 பே பலி.. இன்றைய பாதிப்பு நிலவரம்..
India corona : கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 16,935 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் இன்று ஒரே நாளில் 51 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதுக்குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின் படி, கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 16,935 பேருக்கு கொரோனா தொற்று பதிவாகியுள்ளது. நேற்று 20,528 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், இன்று 16,935 ஆக அதிகரித்துள்ள்து. நாடு முழுவதும் இதுவரை இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கபட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4,37,67,534 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் படிக்க:தமிழகத்தில் இன்று 2,316 பேருக்கு கொரோனா… 2,458 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ்!!
கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றிலிருந்து 16,069 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் இதுவரை கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 4,30,97,510 ஆக உள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இருப்போர் எண்ணிக்கை 94,420 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 51 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் படிக்க:எகிறி அடிக்கும் கொரோனா.. இன்று ஒரே நாளில் 20,528 பேருக்கு பாதிப்பு.. 49 பேர் பலி
நாட்டில் இதுவரை கொரோனாவிற்கு பலியானவர்களின் எண்ணிக்கை 5,25,760 ஆக உயர்ந்துள்ளது. நாட்டில் கொரோனா உயிரிழப்பின் விகிதம் 1.20 % ஆக உள்ளது. அதே போல் சிகிச்சை பெறுவோரின் விகிதம் 0.32 % ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் விகிதம் 98.48 % ஆக குறைந்துள்ளது. இந்தியாவில் இதுவரை 200 கோடிக்கு அதிகமான தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. நேற்று ஒரே நாளில் 2,61,470 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
மேலும் படிக்க:3 வது நாளாக 20 ஆயிரத்துக்கும் மேல் பதிவான கொரோனா.. இன்றைய பாதிப்பு நிலவரம்..