Asianet News TamilAsianet News Tamil

கொரோனா வைரஸை உருவாக்கியது வௌவால் லேடி என்ற பெண் வைராலஜிஸ்ட்..! ஆதாரங்களுடன் நிறுவிய குருமூர்த்தி

உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் இயல்பாக உருவானதில்லை; ஆய்வகத்தில் மனிதர்களால் உருவாக்கப்பட்டது என்பதை, அந்த வைரஸை வௌவால் லேடி என்றழைக்கப்படும் ஷி ஸெங்க்லி எப்படி உருவாக்கினார் என்பதை விளக்கி ஆதாரங்களுடன் நிறுவியுள்ளார் துக்ளக் ஆசிரியர் எஸ்.குருமூர்த்தி.
 

gurumurthy explains the villain in covid issue is whether bat lady or bats
Author
Chennai, First Published May 30, 2021, 5:51 PM IST

உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் இயல்பாக உருவானதில்லை; ஆய்வகத்தில் மனிதர்களால் உருவாக்கப்பட்டது என்பதை, அந்த வைரஸை வௌவால் லேடி என்றழைக்கப்படும் ஷி ஸெங்க்லி எப்படி உருவாக்கினார் என்பதை விளக்கி ஆதாரங்களுடன் நிறுவியுள்ளார் துக்ளக் ஆசிரியர் எஸ்.குருமூர்த்தி.

இதுதொடர்பாக நியூ இந்தியன் எக்ஸ்பிரஸில் குருமூர்த்தி ஆங்கிலத்தில் எழுதிய கட்டுரையின் தமிழாக்கம்:

சீனாவின் வூஹான் நகரில் உருவான இந்த மர்மமான வைரஸ் பரவ தொடங்கி, ஒன்றரை ஆண்டுகள் ஆனபின்பும் இந்த வைரஸ் மர்மமானதாகவே இருக்கிறது. இந்த வைரஸ் உருவான 3 மாதத்திற்கு பின் அதற்கு கோவிட்-19 என்ற பெயர் சூட்டப்பட்டாலும், அந்த பெயர் வைரஸை குறிப்பிடும் பெயர் என்பதைவிட ஏமாற்று பெயராகவே உள்ளது. மர்மமான இந்த வைரஸ் பெருந்தொற்றாக பரவி, ஒன்றரை ஆண்டுக்கு பிறகும் பேரழிவை ஏற்படுத்திவருகிறது. இந்த வைரஸ் பரவ தொடங்கியதிலிருந்தே, இது இயல்பாக உருவானதா அல்லது மனிதர்களால் உருவாக்கப்பட்டதா என்பது பெரும் கேள்வியாக இருந்துவருகிறது. 

கொரோனா வைரஸ் உருவான விதத்தை தெரிந்துகொள்வது வெறும் ஆர்வம் மட்டுமல்ல. இது மீண்டும் மீண்டும் பரவாமல் தடுப்பதற்கான தீர்வை கண்டுபிடிக்கவும் அதுவே வழி. உலக சுகாதார நிறுவனம், கொரோனா வைரஸின் உருவாக்கத்தை கண்டுபிடிக்க அமைத்த ஆணையம், அதை உறுதியாக கண்டுபிடிக்கவில்லை. கோவிட்-19 என்ற பெயர் ஏமாற்று வேலை என்பதை இன்னும் இந்த உலகம் எழுப்பவில்லை.

கோவிட் 19 - ஏமாற்று பெயர்

வூஹானில் உள்ள இறைச்சி சந்தையிலிருந்து கொரோனா வைரஸ் பரவியதாக சீனா முதலில் தெரிவித்தது. 2002ல் சீனாவின் சந்தையிலிருந்து வௌவால் மூலம் மனிதர்களுக்கு பரவிய SARS வைரஸுடன், இப்போது பரவும் புதிய வைரஸை ஒப்பிட்டனர். SARS வைரஸ் வௌவாலிலிருந்து தான் மனிதர்களுக்கு பரவியது என்பது நிரூபிக்கப்பட்டது. ஆனால் அதனுடன் ஒப்பிடப்படும் இந்த புதிய வைரஸ், அப்படித்தான் பரவியது என்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை; நிரூபிக்கப்படவும் இல்லை. ஆனாலும் சீனாவும் உலக சுகாதார நிறுவனமும் இந்த புதிய வைரஸை SARS உடன் தொடர்புபடுத்துகிறது.

ஆரம்பத்தில் இந்த புதிய வைரஸுக்கு(கொரோனா) “வூஹான் நிமோனியா”, “வூஹான் வைரஸ்” என்றெலாம் பெயரிடப்பட்டது. உடனடியாக உலக சுகாதார அமைப்பு தலையிட்டு, இரண்டே மாதங்களில் இந்த வைரஸுக்கு 3 பெயர்களை சூட்டியது. ஆரம்பத்தில் சார்ஸ்2002 வைரஸுடன் ஒப்பிட்டு சார்ஸ்-2 என்று பெயரிட்டது. இறைச்சி சந்தையிலிருந்து பரவியதற்கான எந்த ஆதாரமும் இல்லாமல் அந்த பெயரை சூட்டியது. சார்ஸ்-1 வைரஸின் புதிய அவதாரம் என்றது. பின்னர் கொரோனா வைரஸ் என்ற பெயர் சூட்டப்பட்டது. விலங்குகளுடன் தொடர்புபடுத்தி இந்த வைரஸுக்கு கொரோனா வைரஸ் என்று பெயர் சூட்டியது உலக சுகாதார அமைப்பு. COVID - 19 என்று பெயரின் விளக்கம் CO - கொரோனா, VI - வைரஸ், D - நோய்(Disease). 19 என்பது அந்த வைரஸ் உருவான ஆண்டு. கோவிட் 19 என்ற பெயரை சூட்டி, இந்த வைரஸ் பரவலுக்கான காரணமாக அப்பாவி விலங்குகள் சித்தரிக்கப்பட்டுள்ளன. ஆனால் அதை இதுவரை நிரூபிக்க முடியவில்லை. உலக சுகாதார நிறுவனத்தின் உண்மை கண்டறியும் ஆணையமே, விலங்கு சந்தையிலிருந்து இந்த வைரஸ் பரவியதற்கான ஆதாரம் எதுவுமில்லை என்று கூறிவிட்டது. ஆனாலும் இன்றுவரை, கொரோனா பெருந்தொற்றி பழிபாவத்தை விலங்குகள் சுமந்துகொண்டிருக்கின்றன.

வைரஸின் மூலாதாரத்தை கண்டுபிடிக்காத போதிலும், விலங்குகள் மீது பழிசுமத்துவது ஏன்? இதோ பதில்.. உலக சுகாதார நிறுவனத்திற்கு ஒரு உன்னதமான கொள்கை இருக்கிறது. அதாவது ஒரு வைரஸ் உருவான இடத்தின் பெயரை(புவிசார்) அந்த வைரஸுக்கு சூட்டக்கூடாது. ஏனெனில், அதுவே அந்த குறிப்பிட்ட பகுதியில் வசிக்கும் இனத்தின் மீது பாகுபாடு காட்டப்படும் என்பதால், வைரஸ் உருவான புவிசார் பெயர் சூட்டப்படாது. அதனால் விலங்குகள் பழியை சுமக்க வேண்டியதாகிறது. இந்த வைரஸ் இயற்கையாக உருவானதா அல்லது மனிதர்களால் உருவாக்கப்பட்டதா என்பது நிரூபிக்கப்படாத நிலையில், அது இயற்கையாக உருவானதுதான் என்று கூறி, உண்மையை கண்டறிய அனுமதிக்காமல் மடைமாற்றம் செய்யப்படுகிறது. 

வௌவால்கள் 1500 கிமீ பறந்துசென்றா வூஹானில் வைரஸை பரப்பியது? 

பேரழிவை ஏற்படுத்தும் இந்த கொடூர வைரஸ் உருவான விதம் குறித்த உண்மையை தெரிந்துகொள்ள உலகமே காத்திருக்கும் வேளையில், நிகோலஸ் வேட் என்ற பத்திரிகையாளர் லாஜிக்குடன் உண்மையை வெளிக்கொண்டுவருகிறார். வேட் சாதாரண பத்திரிகையாளர் அல்ல. அவர் ஒரு அறிவியல் எழுத்தாளர், எடிட்டர் மற்றும் நியூயார்க் டைம்ஸில் பணியாற்றி அறிவியல், இயற்கை ஆகியவை குறித்த அனுபவம் மிக்க எழுத்தாளர். கடந்த மே 5ம் தேதி வெளிவந்த, “கோவிட் வைரஸின் ஆரம்பம்: வூஹானில் மனிதர்களால் உருவாக்கப்பட்டதா அல்லது இயற்கையாக உருவானதா?” என்று பெயரிடப்பட்ட அவரது கட்டுரையில், இந்த வைரஸின் உருவாக்கத்திற்கு சீன வௌவால்கள் தான் காரணம் என்ற கட்டுக்கதைகளை தகர்த்தெறிந்தார். 

வேட் எளிமையான ஒரு கேள்வியை எழுப்பினார்: ”யுனானில் இருந்து வௌவால்கள் 1500 கிமீ பறந்துவந்து வூஹானில் வாழும் மனிதர்களுக்கு கொரோனாவை பரப்பியதா?” 50 கிமீ-க்கு மேல் வௌவால்களால் பறக்க முடியாது. அதுமட்டுமல்லாது, யுனான் வௌவால்கள் 1500 கிமீ பறந்துவந்து எப்படி குறிப்பாக வூஹான் இறைச்சி சந்தையில் உள்ள விலங்குகளுக்கு மட்டும் அந்த வைரஸை பரப்பும்? சார்ஸ் 2002 வைரஸுக்கும் வௌவால்களுக்கும் தொடர்பிருக்கிறது என்பதை விஞ்ஞானிகள் நான்கே மாதத்தில் கண்டுபித்துவிட்டனர். ஆனால் ஒன்றரை வருடம் ஆகியும், இந்த வைரஸ் விவகாரத்தில் வௌவால்களுக்கு தொடர்பிருப்பதை நிரூபிக்க முடியவில்லை என்றார் வேட். மேலும், சீன மக்களே வூஹான் சந்தையிலிருந்து பரவியது என்ற கருத்தை கைவிட்டுவிட்டதை சுட்டிக்காட்டினார் வேட். 

வௌவால் லேடி 100 வௌவால் வைரஸ்களை வூஹானில் உருவாக்கியுள்ளார்:

புதிய வைரஸ் தொடர்பான வேட் எடுத்துரைத்த விஷயங்கள் அருமையானவை. தி வில்லன் - அல்லது தி ஹீரோயின் வூஹான் வைரஸ் கதை. வௌவால் லேடி என்று அறியப்படும் ஷி ஸெங்க்லி என்ற வௌவால் வைரஸ் நிபுணர்ய் தென்சீனாவில் உள்ள யுனானில் உள்ள வௌவால் குகைகளிலிருந்து நூற்றுக்கும் அதிகமான வௌவால் கொரோனா வைரஸ்களை 2015 நவம்பரில் ஆராய்ச்சிக்காக எடுத்துவந்துள்ளார். ரால்ஃப் எஸ் பரிக் என்ற கொரோனா வைரஸ் ஆராய்ச்சியாளருடன் இணைந்து, வௌவால் வைரஸ்களை மனிதர்களுக்கு பரப்புவது குறித்து ஆராய்ச்சி செய்திருக்கிறார். 2015ம் ஆண்டு நவம்பரில் நோவல் கொரோனா வைரஸை உருவாக்கிவிட்டார்கள். எப்படி? இது கொஞ்சம் டெக்னிக்கலான விஷயம். சார்ஸ்-1 வைரஸை அடிப்படையாக வைத்துக்கொண்டு, அந்த வைரஸின் ஸ்பைக் புரோட்டீனை வௌவால் வைரஸை கொண்டு மாற்றியுள்ளனர். அப்படி உருவாக்கப்பட்ட வைரஸ், மனிதர்களை காற்றின் மூலமே தொற்றக்கூடியது. 

வைராலஜி நிபுணர் ஒருவரின் கூற்றை வேட் சுட்டிக்காட்டியுள்ளார். “மனிதர்களால் உருவாக்கப்பட்ட அந்த வைரஸ் வெளியானால், அது ஏற்படுத்தக்கூடிய பாதிப்புகளை யாராலும் கணிக்கமுடியாது” என்று அந்த நிபுணர் கூறியதை வேட் சுட்டிக்காட்டினார். வைராலஜிஸ்ட்டுகள் இப்பேர்ப்பட்ட பேரழிவை ஏற்படுத்தும் வைரஸ்களை ஏன் உருவாக்க வேண்டும்? வைராலஜி ஆராய்ச்சியில் "Gain of Function"(GOF) என்று ஒன்று உள்ளது. அதனடிப்படையில், எதிர்காலத்தில் தீவிர நோய் பரவலை தடுக்கும் ஆராய்ச்சி என்று கூறி, அபாயகரமான வைரஸ்களை உருவாக்குகிறார். சார்ஸ்-1 வைரஸின் உருமாறிய எதிர்கால நோய் பரவலை தடுக்கும் ஆராய்ச்சி என்று இந்த வைரஸை உருவாக்கியுள்ளனர். அதை, GOI கான்செப்ட்டை வைத்து ஷி ஸெங்க்லி மற்றும் ரால்ஃப் பாரிக் ஆகியோர் நியாயப்படுத்தவும் செய்துள்ளனர்.

மனித செல்களை பாதிக்கக்கூடிய மரபணு பொறியியல் கொரோனா வைரஸ்களை உருவாக்கும் பணிகளை மேற்கொண்டார். ஷி என்ற அந்த வௌவால் லேடி தான் அதை உருவாக்கினார் என்று உறுதியாக கூறமுடியும்? WIV(வூஹான் வைராலஜி இன்ஸ்டிடியூட்) உடனான அமெரிக்க தொடர்பு குறித்த ரெக்கார்டுகளை வேட் மேற்கோள் காட்டுகிறார்.

வௌவால் லேடி உருவாக்கிய வைரஸே தவிர, வௌவால் உருவாக்கியதல்ல:

வௌவால் லேடி இந்த வைரஸ் உருவாக்கும் பணியை மேற்கொண்டதை 2 ஆதாரங்களுடன் நிறுவுகிறார் பத்திரிகையாளர் வேட். 

1. அமெரிக்க தேசிய சுகாதார இன்ஸ்டிடியூட்(US National Institutes of Health - NIH) வௌவால் லேடி(ஷி)க்கு பெருந்திட்டத்திற்கான நிதி வழங்கியதற்கு ஆதாரம் உள்ளது. 2015 மே 5ம் தேதி ஃபாக்ஸ் நியூஸ், வூஹான் வைராலஜி இன்ஸ்டிடியூட்டிற்கு ஒபாமா அதிபராக இருந்தது முதல், அதாவது 2005 முதல் 2019 வரை அமெரிக்கா நிதி வழங்கியிருப்பதை சுட்டிக்காட்டியது. 

அந்த அமெரிக்க நிதியிலிருந்து ஷி என்ன செய்ய வேண்டும் என்பதை அந்த திட்ட முன்மொழிதல் தெளிவாக விளக்குகிறது. அமெரிக்க தேசிய சுகாதார இன்ஸ்டிடியூட்(என்.ஐ.ஹெச்) அந்த நிதியை, வைராலஜிஸ்ட்டுகளுக்கான சங்கத்தின் முக்கிய புள்ளியான பீட்டர் டாஸ்ஜாக்கிடம் வழங்கியது. அவருக்கு வழங்கப்பட்ட காண்ட்ராக்ட்டை அவர், ஷி-யிடம் சப் காண்ட்ராக்ட்டாக வழங்கினார். அந்த திட்ட முன்மொழிதலில் இடம்பெற்ற விஷயங்களை விளக்கிய வேட், மனித செல்களை பாதிக்கக்கூடிய கொரோனா வைரஸ்களை உருவாக்கத் தொடங்கினார் ஷி. ஷி(வௌவால் லேடி) தான் சார்ஸ்-2 வைரஸை உருவாக்கினார் அல்லது உருவாக்கவில்லை என்பதை திடமாக கூறமுடியாது. ஏனெனில், சீனா ஷி-யின் ஆய்வகத்திற்கு சீல் வைத்துவிட்டது.

ஆனால் பீட்டர் 2019 டிசம்பர் 9ல் கொடுத்த நேர்காணலை மேற்கோளை காட்டியுள்ளார் வேட். அதாவது வூஹானில் கொரோனா பரவ தொடங்கியதற்கு சற்று முன்பாக பீட்டர் கொடுத்த பேட்டி, மனித செல்களை தாக்கும் கொரோனா வைரஸ்களை ஷி(வௌவால் லேடி) உருவாக்கிவிட்டார் என்பதை வெளிச்சம் போட்டு காட்டியது. நாங்கள்(பீட்டர் மற்றும் ஷி) 6-7 ஆண்டுகளாக போராடி இப்போது சார்ஸுடன் தொடர்புடைய 100 புதிய கொரோனா வைரஸ்களை கண்டறிந்துள்ளோம் என்று பீட்டர் சொன்னதை வேட் சுட்டிக்காட்டியுள்ளார். 

கண்டுபிடிக்கப்பட்ட அந்த 100 வகை கொரோனா வைரஸ்களில் சில, அந்த ஆய்வகத்திலேயே மனித செல்களுக்குள் புகுந்துவிட்டது. இவை சிகிச்சை அளிக்க முடியாதவை. மேலும் எந்த தடுப்பூசியும் இந்த வைரஸ்களுக்கு எதிராக செயல்படாது. அதனால் இந்த வைரஸ்கள் உண்மையாகவே மிக மிக அபாயமானவை. இதில் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டியவை: இவற்றிற்கு எதிராக சிகிச்சை அளிக்க முடியாது, தடுப்பூசியாலும் கட்டுப்படுத்த முடியாது என்பவைதான் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டியவை. 

தடுப்பூசியாலும் தடுக்க முடியாத வகையில் 100க்கும் மேற்பட்ட வைரஸ்களை உருவாக்கிய வௌவால் லேடியான ஷி-யை, அவருக்கு அந்த சப் காண்ட்ராக்ட்டை வழங்கிய பீட்டர் வெகுவாக புகழ்ந்துள்ளார். 

இது வெறும் பாதி கதை தான். இன்னும் இருக்கிறது. வூஹானில் அமைந்துள்ள வூஹான் வைராலஜி இன்ஸ்டிடியூட்(WIV), மனித நலனுக்கான அறிவியல் அகாடமி அல்ல. WIV சீன ராணுவத்துடன் இணைந்து, அடுத்த உலகப்போருக்கான பயோ ஆயுதங்கள் தயாரிப்பு குறித்து 2015லிருந்து திட்டம் தீட்டிவருவது குறிப்பிடத்தக்கது. எனவே இது மக்களின் உடல்நிலை, ஆரோக்கியம் சார்ந்த பிரச்னைகளுடன் நின்றுபோவதில்லை. சர்வதேச பாதுகாப்பிற்கே அச்சுறுத்தல் ஆகும்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios