Corona India : இந்தியாவில் மீண்டும் லாக்டவுன்.. அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு.. பீதியில் மக்கள் !!
கடந்த சில நாட்களாக மீண்டும் மெல்ல, மெல்ல அதிகரித்துவருவதால், கொரோனா 4 ஆவது அலை இந்தியாவில் வந்துவிடுமோ அச்சம் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
கொரோனா பாதிப்பு உயர்வு :
உலகத்தையே ஆட்டி படைத்து கொண்டிருக்கிறது கொரோனா தொற்று. இந்த 2 வருடமாகவே நம்மை உலுக்கி எடுக்கும் வைரஸ் தொற்றுக்கு உலகம் முழுவதும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 61.32 லட்சத்தை தாண்டிவிட்டது. இந்தியாவில் கொரோனா தினசரி பாதிப்பு தொடர்ந்து குறைந்து வந்த நிலையில் கடந்த 21 ஆம் தேதி 1,549 ஆக இருந்தது. இதனையடுத்து கொரோனா கட்டுப்பாடுகளை மாநிலங்கள் முழுமையாக தளர்த்தி கொள்ளலாம் என்று மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்திருந்தது.
உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 61.32 லட்சத்தை தாண்டியது. உலக அளவில் 6,132,796 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்துள்ளனர். இதுவரை தொற்றுக்கு 477,746,648 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 412,729,768 பேர் குணமடைந்துள்ளனர். குறிப்பாக இந்தியாவில் தற்போது கொரோனா பாதிப்பு என்பது முந்தைய ஆண்டுகளை போல் இல்லாமல் வெகுவாக குறைந்து வருகிறது.
இந்தியாவில் கொரோனா நிலவரம் :
இந்நிலையில் இந்தியாவில் கொரோனாவால் கடந்த 24மணிநேரத்தில் 1,685 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,30,14,687 ஆக உள்ளது. அதேபோல் 83 பேர் உயிரிழந்த நிலையில் இந்தியாவில் கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 5,16,755 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24மணிநேரத்தில் தொற்றில் இருந்து 2499 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆன நிலையில், 4,24,78,087 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர்.
தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 21,530 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா மூன்றாவது அலை ஓய்ந்துவிட்டதாக நாட்டு மக்கள் நிம்மதி அடைந்துள்ள நிலையில், புதிதாக கொரோனா தொற்றுக்கு ஆளாவோரின் எண்ணிக்கை கடந்த சில நாட்களாக மீண்டும் மெல்ல, மெல்ல அதிகரித்து வருகிறது.
கொரோனா 4 ஆவது அலை இந்தியாவில் வந்துவிடுமோ அச்சம் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது. அத்துடன் அதன் விளைவாக நாட்டில் மீண்டும் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுவிடுமோ என்ற பீதியும் மக்களிடையே எழுந்துள்ளது. தற்போது லாக்டவுன் பற்றி கவலைப்பட வேண்டாம் என்று மத்திய அரசு அறிவித்து உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.