இந்தியாவில் பரவுகிறதா AY.4.2 என்ற புதிய வகை கொரோனா வைரஸ்? மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா விளக்கம்!
AY.4.2 எனப்படும் புதிய வகை உருமாறிய கொரோனா வைரஸ் இந்தியாவில் பரவுகிறதா என்பது குறித்து ஆய்வு செய்யப்படுவதாக மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.
சீனாவில் உருவான கொரோனா என்னும் கொடிய வைரஸ் உலகெங்கிலும் பரவி பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியதோடு பல உயிர்களையும் பலி வாங்கியது. பல போராட்டங்களுக்கு பிறகு அந்த வைரசுக்கான தடுப்பூசி கண்டுப்பிடிக்கப்பட்டு அதனை மக்களுக்கு செலுத்தி அந்தந்த நாடுகள் தற்காப்பு நடவடிக்கையை துரிதமாக செயல்படுத்தினர். அதன் பலனாக கொரோனா பாதிப்புகளும் இறப்புகளும் குறைந்தன. இந்த நிலையில் கொரோன வைரஸ் தற்பொது உருமாறியுள்ளது. அதனை டெல்டா பிளஸ் என்று அழைக்கும் நிபுணர்கள், இது முன்பு இருந்த வைரஸை விட கொடிய பாதிப்புகளை ஏற்படுத்தும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
டெல்டா பிளஸ் அல்லது AY.4.2 என்று அழைக்கப்படும் இந்த வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தற்போது அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் AY.4.2 எனப்படும் உருமாறிய கொரோனா வைரஸ் இந்தியாவில் பரவுகிறதா என்பது குறித்து ஆய்வு செய்யப்படுவதாக மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார். இதுக்குறித்து அவர் பேசுகையில், AY 4.2 என்ற புதிய வகை உருமாறிய கொரோனா வைரஸ் குறித்து ஐசிஎம்ஆர், எம்சிடிவி ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தார்.