கோவோவேக்ஸ்-ஐ இவங்களும் செலுத்திக் கொள்ளலாமா? சீரம் அமைப்பின் பதில் இதுவா?
கோவோவேக்ஸ் தடுப்பூசி இந்திய சிறுவர்கள் செலுத்திக் கொள்ளலாம் என்ற அறிவிப்பு வெளியானதைத் தொடர்ந்து இந்த சந்தேகம் பலருக்கும் எழுந்தது.
கொரோனா தடுப்பூசி கோவோவேக்ஸ்-ஐ 12 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் செலுத்திக் கொள்ளலாம் என சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவின் தலைமை செயல் அதிகாரி ஆதார் பூனாவாலா தெரிவித்து இருக்கிறார்.
‘‘கோவோவேக்ஸ் பெரியர்களுக்கும் செலுத்திக் கொள்ளலாமா என பலரும் கேட்டு வந்தீர்கள். இதற்கான விடை ஆம், இதனை 12 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் செலுத்திக் கொள்ளலாம்” என ஆதார் பூனாவாலா தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதில் அளித்து இருக்கிறார்.
கோவோவேக்ஸ் தடுப்பூசி இந்திய சிறுவர்கள் செலுத்திக் கொள்ளலாம் என்ற அறிவிப்பு வெளியானதைத் தொடர்ந்து இந்த சந்தேகம் பலருக்கும் எழுந்தது. இந்த நிலையில், ஆதார் பூனாவாலா இவ்வாறு டுவிட் செய்து இருக்கிறார். முன்னதாக கோவோவேக்ஸ் தடுப்பூசி இந்தியாவில் உள்ள சிறுவர்கள் செலுத்திக் கொள்ளலாம் என டுவிட் செய்து இருந்தார்.
பிரதமரின் தொலைநோக்கு திட்டம்:
‘‘கோவோவேக்ஸ் இந்தியாவில் உள்ள சிறுவர்களுக்கு தயார் நிலையில் உள்ளது. இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்டு ஐரோப்பாவிலும் விற்பனை செய்யப்பட்டு வரும் ஒரே தடுப்பூசி இது தான். இந்த தடுப்பூசி கிட்டத்தட்ட 90 சதவீதம் செயல்திறன் கொண்டது ஆகும். நம் குழந்தைகளை காப்பாற்ற மற்றொரு தடுப்பூசி வேண்டும் என்ற பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்கு பார்வையின் கீழ் மற்றொரு தடுப்பூசி இது" என அவர் தனது டுவிட்டரில் தெரிவித்து இருக்கிறார்.
கடந்த வாரம் நோயெதிர்ப்பு சக்திக்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனை குழு சீரம் இந்தியா அமைப்பின் கோவோவேக்ஸ் கொரோனா தடுப்பூசியை 12 முதல் 17 வயது கொண்டவர்களுக்கு பயன்படுத்த அனுமதி அளித்து இருந்தது. கடந்த ஆண்டு டிசம்பர் மாத வாக்கில் கோவோவேக்ஸ் தடுப்பூசியை அவசரகால தேவைக்கு பயன்பாடுத்துவதற்கான தடையை நீக்கி இருந்தது.
கோவின் தளத்தில் கோவோவேக்ஸ்:
இந்த நிலையில், பலர் கோவோவேக்ஸ் தடுப்பூசி கிடைப்பதில்லை என டுவிட்டரில் குற்றம்சாட்டி வருகின்றனர். பலர் கோவின் செயலியில் 18 வயதுக்கு மேற்பட்டோர் கோவோவேக்ஸ் தடுப்பூசியை செலுத்திக் கொள்வதற்கான ஆபஷன் இல்லை என தெரிவித்து வருகின்றனர். ‘‘18 மற்றும் அதற்கும் அதிக வயதை கோவின் தளத்தில் செட் செய்தால், கோவோவேக்ஸ் பட்டியலிடப்படவில்லை. இந்த பிரச்சினை விரைந்து கவனிக்கப்படும் என நம்புகிறோம்," என ஒருவர் டுவிட் செய்து இருக்கிறார்.
சிறுவர்களுக்கு தடுப்பூசி:
இந்தியாவில் 15 முதல் 18 வயதினருக்கு தடுப்பூசி செலுத்தும் பணி இந்த ஆண்டு ஜனவரி 3 ஆம் தேதி தொடங்கியது. அதன்படி 15 முதல் 18 வயதுடையவர்களுக்கு அரசு தடுப்பூசி மையங்களில் பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இது மட்டும் இன்றி 12 முதல் 14 வயதுடையவர்களுக்கு கோர்ப்வேக்ஸ் தடுப்பூசியும் செலுத்தப்பட்டு வருகிறது.