ரொம்ப அசால்டா இருக்க வேண்டாம்.. அடுத்த இரண்டுகளில் மீண்டும் கொரோனா வரும் ..எச்சரிக்கும் நிபுணர்..
கொரோனா வைரஸின் அடுத்த திரிபு ஒமைக்ரானை போலவே வீரியமற்றதாக இருக்கும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை என்று இங்கிலாந்தின் தலைமை மருத்துவ அதிகாரி எச்சரித்துள்ளார்.
கொரோனா வைரஸின் அடுத்த திரிபு ஒமைக்ரானை போலவே வீரியமற்றதாக இருக்கும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை என்று இங்கிலாந்தின் தலைமை மருத்துவ அதிகாரி எச்சரித்துள்ளார்.தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்துள்ளது. ஜனவரி மாதம் நாடு முழுவதும் கொரோனா மூன்றாவது அலை ஏற்பட்டது. தமிழகத்திலும் கொரோனா பாதிப்பு உச்சத்தை தொட்டது. ஒரு நாள் கொரோனா பாதிப்பு 30,000 ஐ கடந்தது. இதனையடுத்து மாநிலம் முழுவதும் கொரோனா கட்டுப்பாடுகள் கடுமையாக்கபட்டன.
முழு ஊரடங்கு, இரவு நேர ஊரடங்கு, நேர கட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு விதிமுறைகள் அமலுக்கு வந்தன. கடற்கரை, பூங்காக்கள் உள்ளிட்ட பொழுதுபோக்கு தளங்களுக்கு செல்வதற்கு மக்களுக்கு தடை விதிக்கப்பட்டது. பள்ளிகள், கல்விநிறுவனங்களில் நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டு, ஆன்லைன் முறையில் பாடங்கள் எடுக்கப்பட்டன. இந்நிலையில் பிப்ரவரி மாதம் தொடக்கத்தில் உச்சத்தில் இருந்த பாதிப்பு மெல்ல மெல்ல குறையத் தொடங்கியது. தற்போது ஒரு நாள் கொரோனா பாதிப்பு 50 க்கும் கீழ் குறைந்துள்ளது. அந்த வகையில் மிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 35 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 2020 மார்ச் 30 ஆம் தேதிக்கு பிறகு 5வது முறையாக 50க்கும் கீழே கொரோனா தொற்று பதிவாகியுள்ளது. சென்னையில் மட்டும் 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் அடுத்த இரண்டு ஆண்டுகளில் ஒமைக்ரானை விட மோசமான கொரோனா புதிய வைரஸ் வருவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது என இங்கிலாந்தின் தலைமை மருத்துவ அதிகாரியும், தொற்றுநோயியல் நிபுணருமான கிறிஸ் விட்டி எச்சரித்துள்ளார். உலகம் முழுவதும் வைரஸ் இறுதி நிலையை அடைந்துவிட்டதாகக் கருதி, பல நாடுகள் கொரோனா தொற்று கட்டுப்பாடுகளைத் தளர்த்தி உள்ளது தவறானது என்று அவர் குறிபிடுகிறார்.
காய்ச்சல் போன்ற அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடிய வைரஸ், வாழ்நாள் முழுவதும் நம்முடன் இருக்கும் எனவும் வைரஸ் தொற்று தொடர்ந்து கணிப்புகளுக்கு அப்பாற்பட்டு இருப்பதால் இன்னும் நீண்ட தூரம் நாம் செல்ல வேண்டி உள்ளது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் வரவிருக்கும் புதிய திரிபு, ஒமைக்ரானைவிட மோசமான பிரச்னைகளை ஏற்படுத்தக்கூடும் என்று அவர் எச்சரித்துள்ளார். அந்தத் தொற்று ஏற்படுத்தும் பிரச்னைகள் ஒமைக்ரானை விட மோசமானதாக இருக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
எனவே அடுத்த கொரோனா வைரஸின் அடுத்த திரிபு ஒமைக்ரானை போலவே வீரியமற்றதாக இருக்கும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. எப்போதும்போல கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றுவது மட்டுமே நம்மை நாம் காத்துக்கொள்ள ஒரே வழி என்று அவர் கூறுகிறார்.