Asianet News TamilAsianet News Tamil

கொரோனா பரவல் குறைய தொடங்குகிறதா..? ஆர்- எண் மதிப்பு குறைந்தது..சென்னை ஐஐடி ஆய்வறிக்கையில் தகவல்..

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலைக் கணக்கிடும் ஆர்-வேல்யு கடந்த இரண்டு வாரங்களை விட திடீரென ஜனவரி 7 முதல் 13ம் தேதி வாரத்தின்படி குறைந்துள்ளது என்று சென்னை ஐஐடி ஆய்வில் தெரியவந்துள்ளது. 
 

Coronavirus R value
Author
India, First Published Jan 16, 2022, 6:56 PM IST

ஆர் எண் மதிப்பு என்பது கொரோனா வைரஸை மதிப்பிடுவதற்கான ஒரு வழி அல்லது நோயை பரப்பும் திறனை குறிப்பது ஆகும். R என்பது பாதிக்கப்பட்ட நபர் ஒரு வைரஸை சராசரியாக பரப்பும் நபர்களின் எண்ணிக்கையை குறிப்பது ஆகும். உங்களிடம் இருந்து 10 முதல் 15 பேரிடம் பரவினால் ஆர் மதிப்பு 10 அல்லது 15 என்பதாக ஆர மதிப்பு இருக்கும் ஆனால் உங்கள் மூலம் வெறும் ஒருவருக்கே பரவியது என்றால் ஆர் மதிப்பு 1 ஆகும்.

Coronavirus R value

கொரோனா நோய்த்தொற்றின் இரண்டாவது அலை உச்சத்தில் இருந்தபோது, ​​நாட்டின் ஒட்டுமொத்த ஆர்-மதிப்பு மார்ச் 9 முதல் ஏப்ரல் 21 வரை 1.37 என்ற அளவுக்கு அதிகரித்தது. இது ஏப்ரல் 24 முதல் மே 1 வரை 1.18 ஆகவும், பின்னர் ஏப்ரல் 29 முதல் மே 7 வரை 1.10 ஆகவும் குறைந்து காணப்பட்டதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. பின்னர் ஆர்-மதிப்பு மே 15 முதல் ஜூன் 26 வரை 0.78 ஆகவும், ஜூன் 20 முதல் ஜூலை 7 வரை 0.88 ஆகவும் இருந்தது. 

Coronavirus R value

ஆர்-வேல்யு எண்ணில் 1-க்கு குறைவாக இருந்தால்தான் நோய் பரவல் குறைவாக இருக்கிறது என்று அர்த்தம். 1 அல்லது அதிகமாகச் செல்லும்போது, நோய்தொற்று பரவல் வேகம் அதிகரி்க்கிறது என்றாகும். அதன்படி ஜூலை முதல் வாரத்தில் குறைந்த ஆர்- வேல்யு ஊரடங்கு தளர்வு நடவடிக்கைகள் மற்றும் மக்கள் அலட்சியம் காரணமாக மீண்டும் உயரத் தொடங்கியது. என்.டி.டி.வி பகுப்பாய்வின்படி, ஜூலை 16 அன்று 0.95 என்ற புதிய உயர்வைத் தொட்டது. இந்த மதிப்பு ஆகஸ்ட் மாதத்தில் 1.17 ஆக இருந்து பின் செப்டம்பர் மாதத்தில் குறைந்து 0.92 ஆக பதிவானது. அதே போன்று செப்டம்பர் 25 ஆம் தேதி முதல் ஆக்டோபர் 18 வரை 0.90 ஆக மேலும் குறைந்தது.

Coronavirus R value

இந்நிலையில் டிசம்பர் மாதத்தில் ஒமைக்ரான் மற்றும் தினசரி கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் ஆர் - வேல்யூ மீண்டும் அதிகரித்துள்ளது. நோய்த்தொற்றின் பரவலைக் குறிக்கும் ஆர் வேல்யூ மதிப்பு 2.69 உயர்ந்தது. இது தொற்றுநோயின் இரண்டாவது அலையின் உச்சத்தின் போது பதிவு செய்யப்பட்ட 1.69 ஐ விட அதிகமாகும் என்று மத்திய சுகாதாரத்துறை தெரிவித்தது.இந்நிலையில் இந்தியாவின் ஆர்-வேல்யுவை அடிப்படையாக வைத்து சென்னை ஐஐடியின் கணிதத்துறை கொரோனா பரவல் குறித்து ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டுள்ளது.

Coronavirus R value

சென்னை ஐஐடியின் கணிதத்துறை, கணிணி கணிதவியல் மற்றும் புள்ளிவிவர அறிவியல் பிரிவின் பேராசிரியர்கள் நீலிஷ் எஸ் உபாத்யாயே,எஸ் சுந்தர் ஆகியோர்தலைமையிலான குழு இணைந்து இந்தஆய்வை நடத்தின. இதன்படி “ கடந்த 2 வாரங்களுக்கு முன் இந்தியாவில் இருந்த ஆர்-வேல்யு ஜனவரி 7 முதல் 13ம் தேதி வாரத்தில் இல்லை, மாறாக ஆர்-வேல்யு குறைந்துள்ளது. மும்பையில் 1.3, டெல்லியில் 2.5, சென்னையில் 2.4, கொல்கத்தாவில் 1.6 என்ற அளவில் இருக்கிறது.

ஆனால் கடந்த ஆண்டு டிசம்பர் 25 முதல் 31ம் தேதி 2.9 என்ற அளவிலும், 2022 ஜனவரி1 முதல் 6வரை ஆர்வேல்யு 4 என்ற அளவிலும் இருந்தது.ஆனால், கடந்த இருவாரங்களில் இல்லாத அளவு ஆர்-வேல்யு பல்வேறு நகரங்களில் குறைந்துள்ளது. இதன் மூலம் தொற்றின் வேகம் குறையத் தொடங்கியுள்ளது எனத் தெரிவித்துள்ளது. ஆனால், இந்தியாவில் கொரோனா தொற்று கடந்த 24மணி நேரத்தில் 2.71 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒமைக்ரான் தொற்று 7 ஆயிரத்தைக் கடந்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் ஒமைக்ரான் பரவல் 28 சதவீதம் அதிகரித்து, 1,702 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us:
Download App:
  • android
  • ios