Corona puducherry:அதிகரிக்கும் உயிரிழப்பு..? இன்று ஒரே நாளில் 5 பேர் பலி.. 923 பேருக்கு கொரோனா..
புதுச்சேரியில் கடந்த 24 மணிநேரத்தில் 923 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சிகிச்சை பலனின்றி மேலும் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
புதுச்சேரி கடந்த 24 மணிநேரத்தில் 3177 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில், புதுச்சேரியில் 650 நபர்களுக்கும், காரைக்காலில் 186 பேர், ஏனாமில் 72 பேரும், மாஹேவில் 15 பேர் என மொத்தம் 923 நபர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.இதனால், மாநிலத்தில் தற்போது 11,027 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். புதுவையில் மூவர் மற்றும் காரைக்காலில் இருவர் என மொத்தம் 5 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததால் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 1,928-ஆக அதிகரித்துள்ளது.
மேலும் மாநிலத்தில் இதுவரை 1,47,792 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 1,60,747 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். என சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.கொரோனா தடுப்பூசி முதல் தவணை 9,20,981 பேரும், இரண்டாம் தவணை 6,05,041 பேரும் செலுத்தியுள்ளனர். பூஸ்டர் தடுப்பூசி இதுவரை 7,373 பேர் செலுத்திக்கொண்டனர். மொத்தமாக 15,33,395 பேர் தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனர்.
நேற்று புதுச்சேரி மாநிலத்தில் 3,465 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இதில் புதுச்சேரியில் 570 பேருக்கும், காரைக்காலில் 172 பேருக்கும், ஏனாமில் 102 பேருக்கும், மாஹேயில் 11பேருக்கும் என மொத்தம் 855 (24.68 சதவீதம்) பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இந்நிலையில் இன்று தொற்று எண்ணிக்கை சற்று அதிகரித்துள்ளது. அதே போல் நேற்று 2 பேர் உயிரிழந்த நிலையில் இன்று மட்டும் 5 பேர் கொரோனா தொற்றிற்கு பலியாகியுள்ளனர்.
இந்நிலையில் நாடு முழுவதும் இன்று ஒரே நாளில் 893 பேர் உயிரிழந்துள்ளனர்.இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 2.34 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் இந்தியாவில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,10,92,522 ஆக உள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 893 பேர் கொரோனா தொற்றுக்கு பலியாகியுள்ளனர். இதனிடையே தமிழகத்தில் நேற்று ஒரு நாள் பாதிப்பு 24,418 ஆக பதிவாகியுள்ளது. 1,31,684 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 24,418 ஆக உள்ளது.
சென்னையில் மட்டும் 4,508 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் ஏற்கனவே 5,246 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று கொரோனா எண்ணிக்கை 4,508 ஆக குறைந்துள்ளது. ஜனவரி 1 ஆம் தேதி 682 ஆக இருந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு தற்போது 4,508 ஆக அதிகரித்துள்ளது.இதற்கிடையே, மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்ட்வியா சனிக்கிழமையன்று நடந்த 5 மாநிலங்களுடனான கொரோனா மறு ஆய்வுக்கூட்டத்தின்போது கொரோனா தொற்று எண்ணிக்கை குறைந்தாலும் மக்கள் விழிப்புடன் இருக்கவேண்டும் என எச்சரித்துள்ளார்.