Asianet News TamilAsianet News Tamil

பரபரப்பு... விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் கொரோனா... 250 பேருக்கு தொற்று உறுதி!!

ஸ்ரீஹரிகோட்டா ராக்கெட் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இரண்டு நாட்களில் 250 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

corona for 205 people at the sriharikota rocket space
Author
Sriharikota, First Published Jan 19, 2022, 10:43 PM IST

ஸ்ரீஹரிகோட்டா ராக்கெட் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இரண்டு நாட்களில் 250 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆந்திராவில் ஒரேநாளில் 10,057 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆந்திராவில் கடந்த 7 மாதங்களுக்கு பின் மீண்டும் கொரோனா தொற்று 10,000ஐ கடந்துள்ளது. ஒரே நாளில் 8 பேர் உயிரிழந்துள்ள நிலையில் பலி எண்ணிக்கை 14,522 ஆக அதிகரித்துள்ளது. இதை அடுத்து ஆந்திர மாநில சுகாதாரத்துறை பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தமிழகத்தை விட ஆந்திராவில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதை அடுத்து பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஸ்ரீஹரிகோட்டா ராக்கெட் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இரண்டு நாட்களில் 250 பேருக்கு கொரோனா தோற்று உறுதி செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

corona for 205 people at the sriharikota rocket space

ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம் ஸ்ரீஹரிகோட்டா ராக்கெட் விண்வெளி ஆராய்ச்சி மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு பணிபுரியக் கூடிய விஞ்ஞானிகள் மற்றும் பணியாளர்கள் பொங்கல் பண்டிகையை ஒட்டி அவரவர் சொந்த ஊருக்கு சென்றனர். விடுமுறை முடிந்து அனைவரும் பணிக்குத் திரும்பிய நிலையில் பலருக்கு கொரோனா அறிகுறிகள் தென்பட்டுள்ளது. இதை அடுத்து அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பரிசோதனையின் முடிவில் நேற்று 91 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்த நிலையில் இன்று மேலும் 152 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

corona for 205 people at the sriharikota rocket space

இதன் மூலம் இரண்டு நாட்களில் 250 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் விடுமுறை முடித்து வரக்கூடிய அனைவருக்கும்  கட்டாயம் கொரோனா பரிசோதனை மேற்கொண்ட பிறகு ஆராய்ச்சி மையத்தில் அனுமதிக்க வேண்டும் எனவும் 50 சதவீத பணியாளர்களுடன் ஏற்கனவே பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதன் காரணமாக இந்த மாத இறுதியில் விண்ணில் செலுத்தப்பட உள்ள  ஜி.பி.எஸ். தொழில்நுட்ப செயற்கைக்கோள் மற்றும் ககன்யான் திட்ட பணிகள் காலதாமதம் ஆவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios